ஜோவிகாவுக்குள் ஒளிந்திருந்த வனிதா, வார்த்தையை விட்ட பிரதீப்.. ரணகளத்தில் முடிந்த ரேங்கிங் டாஸ்க்

Biggboss 7-Pradeep-Jovika: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற ரேங்கிங் டாஸ்க் இதுவரை இல்லாத அளவுக்கு ரணகளமாக இருந்தது. எப்போதுமே ஏதாவது ஒரு சண்டையை மூடிவிட்டு வேடிக்கை பார்க்கும் பிக்பாஸ் நேற்று நடைபெற்ற காரசார விவாதத்தை பார்த்து நிச்சயம் மனம் குளிர்ந்து போயிருப்பார். அந்த அளவுக்கு வார்த்தை தடித்து கைகலப்பில் முடியாதது ஒன்றுதான் குறை.

அந்த வகையில் ஹவுஸ்மேட்ஸ் ஆளுக்கு ஒரு நம்பரை பிடித்துக் கொண்டு இருந்த நிலையில் முதலிடத்திற்கு தான் கடும் போட்டி நடைபெற்றது. ஆனால் அதை லாவகமாக கைப்பற்றிய பிரதீப்பிடம் மாயா தன் தரப்பு வாதத்தை முன் வைத்தார். ஆனாலும் அவர் உன் பேச்செல்லாம் நம்ப முடியாது கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் என்ற ரீதியில் நின்று கொண்டிருந்தார்.

கடைசியில் அவருடைய வீக் பாய்ண்ட்டை பிடித்த மாயா நான் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் கிடைக்கும் ஐம்பது லட்சம் பணத்தை உங்களுக்கே கொடுத்து விடுகிறேன். நீங்களாக பார்த்து எனக்கு ஏதாவது செய்தால் போதும் என்ற அளவுக்கு இறங்கி வந்தார். அதை தொடர்ந்து நடந்த விவாதத்தில் பிரதீப் முதலிடத்தை மாயாவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு இரண்டாம் இடத்திற்கு மாறினார்.

அதன் பிறகு நடந்த விவாதங்களில் மீண்டும் இருவரும் முதலிடத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தனர். உடனே கடுப்பான ஜோவிகா பிக்பாஸ் அப்ப நானும் போய் அங்க நிக்கிறேன் என்று அனத்திக் கொண்டிருந்தார். இப்படியாக நகர்ந்த நேரங்களில் மாயா வெளியேற பிரதீப் முதலிடத்தை ஸ்ட்ராங்காக பிடித்துக் கொண்டு நின்றார்.

அதை தொடர்ந்து ஜோவிகாவுக்கும் அவருக்கும் சண்டை ஸ்டார்ட் ஆனது. அதுதான் நேற்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருந்தது. மாறி மாறி தங்கள் பக்க நியாயங்களை முன் வைக்கிறேன் என்ற பெயரில் இருவரும் வேட்டையன், சந்திரமுகி ரேஞ்சுக்கு எதிரும் புதிருமாக நின்றனர். அதில் வழக்கம் போல் ஜோவிகா காட்டு கத்தாக கத்தி தனக்குள் ஒளிந்திருந்த வனிதாவை வெளியில் கொண்டு வந்தார்.

அதேபோல் பிரதீப்பும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்து நாயே என்று ஒரு வார்த்தையை விட்டார். ஆனால் அதற்கு முன்பே ஜோவிகா படுமோசமான ஒரு வார்த்தையை உதிர்த்தார். அதில் பிரதீப் தான் பேசிய வார்த்தை தப்பு என்று நினைத்துக் கொண்டு முதல் இடத்தை அவருக்கு விட்டுக் கொடுத்துவிட்டு வெளியேறினார். இப்படியாக நேற்றைய நிகழ்ச்சி இந்த மூன்று நபர்களால் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் ரசிகர்களின் ஆதரவு இதில் பிரதீப்புக்கு மட்டும் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.