ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விசித்ரா இல்ல ரவீனா, உங்க கூட ஒண்ணா படுக்கணும்.. கேமராவை மறந்து மட்டமாக கெஞ்சிய போட்டியாளர்

Vichitra-Raveena-Biggboss 7: எப்படா பிக்பாஸ் தொடங்கும் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது இந்த சீசன் 7. முதல் நாளிலேயே ஏழரையை தொடங்கி வைத்த போட்டியாளர்கள் அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு கன்டென்ட்டாக கொடுத்து சோசியல் மீடியாக்களை குதூகலப்படுத்தி வருகின்றனர்.

அதிலும் கவினுடைய தோஸ்த் பிரதீப் ஆரம்பத்திலிருந்தே ராங் ரூட்டில் தான் போய்க்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் தேவையில்லாமல் எதையாவது பேசி வாங்கி கட்டிக் கொள்ளும் இவர் தற்போது சுற்றிலும் கேமரா இருப்பதை மறந்து மட்டமான ஒரு வேலையை பார்த்திருக்கிறார்.

Also read: பிக் பாஸ் பிரதீப்புக்கு இப்படி ஒரு பிரச்சனையா?. SJ சூர்யாவுக்கு இருக்கும் அதே விசித்திரமான மனநோய்

எதை செய்தால் சர்ச்சையாகும், ப்ரோமோவில் வரும் என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கும் இவர் வயதில் மூத்த நடிகையான விசித்ராவிடம் இன்று பேசிய ஒரு விஷயம் முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது. அதாவது பிக்பாஸ் ஆண் பெண் இருவரும் ஒன்றாக படுக்க வேண்டும் என்று தண்டனை கொடுத்தால் எப்படி இருக்கும் என அவர் பேசியது பகீர் கிளப்பி இருக்கிறது.

அதிலும் விசித்திராவிடம் உங்களுடன் பெட்டில் படுத்து தூங்கணும் என்று அவர் உளறி கொட்டியதை பார்த்த ரசிகர்கள் சரியான ஆண்ட்டி வெறியனா இருப்பானோ என கமெண்ட் கொடுத்து வருகின்றனர். அவருடைய இந்த கேவலமான பேச்சால் கடுப்பான விசித்ரா அது எப்படி என்ன பாத்து அப்படி சொல்லலாம், நீ வாடா ஒரேயடியா உன்ன தூங்க வச்சிடுறேன் என்று கடுப்பானார்.

Also read: அடிச்சு வாய ஒடச்சிடுவேன், போடா லூசு.. 5வது நாளே கலவர பூமியாக மாறிய பிக் பாஸ் வீடு

உடனே பயந்து போன பிரதீப் நைசாக எஸ்கேப் ஆனார். அதன் பிறகும் வாய் அடங்காமல் ரவீனாவிடம் நீயும் நானும் ஒரு பெட்டில் படுத்து தூங்கலாமா என்று கேட்டார். இந்த வீடியோ தான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பிரதீப்புக்கு கட்டம் சரியில்ல, ஆண்டவரிடம் அர்ச்சனை வாங்க போகிறார் என கொந்தளித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை குழந்தைகள் கூட பார்க்கிறார்கள் என்பதை மறந்து போட்டியாளர்கள் கொச்சையாக பேசி வருவது விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளது. இதை வார இறுதியில் கமல் நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும் என்ற குரல்களும் ஒரு பக்கம் எழ தொடங்கியுள்ளது. ஆக மொத்தம் பிரதீப் ஆடியன்ஸின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்து கொண்டிருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

Also read: பயங்கர டஃப் கொடுப்பார் என்று நினைத்தால் டம்மி பீசா இருக்காரு.. நடிகரை கலாய்த்து தள்ளும் ஹவுஸ் மேட்ஸ்

- Advertisement -

Trending News