பிக் பாஸில் சகுனி வேலை பார்த்தது ஜோவிகா தான்.. வெளியேறிய போட்டியாளர் அனன்யா அம்பலப்படுத்திய உண்மை

Bigg Boss Season 7: 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் ஆளாக அனன்யா வெளியேற்றப்பட்டார். இது அனன்யாவிற்கு மட்டுமல்ல பிக் பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏனென்றால் அனன்யா குறைந்தது 50 நாட்களாவது இருப்பார் என்ற நம்பிக்கையுடன் உள்ளே வந்தார்.

அதிரடி திருப்பமாக அவர் முதல் நபராக பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். ஆனால் இப்போது அவர் அளித்த பேட்டியில் பிக் பாஸ் வீட்டில் நடந்த ஒரு சில சர்ச்சைகுரிய விஷயங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதிலும் முதல் வாரத்தில் ஜோவிகா- விசித்ரா இடையே நடந்த பிரச்சனைக்கு யார் காரணம் என்பதை உடைத்துச் சொன்னார்.

அடிப்படைக் கல்வி அறிவையாவது பெற வேண்டும் என விசித்ரா ஜோவிகாவை பார்த்து சொன்னது சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட சர்ச்சையை கிளப்பியது. இதில் பெரும்பாலானோர் ஜோவிகாவின் கருத்துக்கு தான் ஆதரவளித்தனர். ஏனென்றால் படிப்பு வரலை என்றால் அதை விட்டுடனும். அதை தவிர்த்து அவர்களுக்கு எது வருதோ அதில் சிறந்த விளங்க வேண்டும் என்று தன்னுடைய கருத்தை முன் வைத்தார்.

இந்த பிரச்சனை இவ்வளவு பூதாகரமாக வெடிப்பதற்கு முழு காரணமும் ஜோவிகா பார்த்த சகுனி வேலைதான். பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாள் அன்று இரவு, பாதி போட்டியாளர்கள் உறங்கு சென்று விட்டனர். மீதி இருப்பவர்கள் மட்டும்தான் ஒன்றாக அமர்ந்து பேசி இருக்கிறார்கள். அப்போதுதான் விசித்ரா ஜோவிகாவை அடிப்படை கல்வியாவது பெற்றுக்கொள் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதை எதற்கு விவாத மேடையில் கொண்டுவர வேண்டும். முதலில் விசித்ரா மற்றும் அனன்யா இருவரும் தான் டாட்டூ விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது இடையில் குறுக்கிட்ட ஜோவிகா, ‘எனக்கும் இதுபோன்ற நடந்திருக்கிறது’ என்று படிப்பை பற்றி அவர்தான் முதலில் ஆரம்பித்தார்.

அப்படியே குடும்பத்தைப் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர். அந்த சமயத்தில் நான் எதுவுமே பேசவில்லை. ஏனென்றால் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையை விமர்சிப்பது என்னுடைய குணம் அல்ல என்று கூறிய அனன்யா, இந்த பிரச்சனை ஜோவிகாவால் தான் வந்தது. அவர் ட்ரிகர் செய்ததால் தான் விசித்ரா தொடர்ந்து பேச வேண்டியதாயிற்று.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்