விஜய் முடிவால் அட்லீக்கு வந்த பெரிய வாய்ப்பு.. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள போகும் லோகேஷ்

Actor Vijay: விஜய்யின் அடுத்த கட்ட படங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாய் அட்லீ இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

லியோ படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படம் தான் தளபதி 68. வெங்கட் பிரபு இயக்கத்தில் மேற்கொள்ளும் இப்படத்தை முடித்துவிட்டு 2 வருடம் ஓய்வெடுக்க போவதாக பேச்சு அடிபட்டு வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், அரசியல் பணி குறித்த எண்ணமும் விஜய்க்கு இருந்து வருகிறதாம்.

Also Read: வெங்கட் பிரபவை வைத்து ஜிவி பிரகாஷ் உருட்டும் அடியே ட்ரெய்லர்.. அடுத்த சயின்ஸ் பிக்சன் கதை ரெடி

தற்பொழுது விஜய் ஓய்வெடுக்க போகிறார் என்றால், அடுத்தது இவரை வைத்து படம் இயக்க இருந்த அட்லீயின் கதை என்னவென்று தெரியாமல் குழம்பி வருகின்றனர். தற்போது பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ, ஷாருக்கான், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ஜவான் படம் வெற்றி பெற்றுவிட்டால் அவரின் ரேஞ்சோ வேற லெவலில் எகிறிவிடும்.

இவரின் இத்தகைய வளர்ச்சியை கொண்டு, விஜய் நடிப்பில் அட்லீ இயக்கப் போகும் படத்திற்கு சன் பிக்சர்ஸ் முன்னேற்பாடாய் பெரும் தொகையை அட்வான்ஸ் ஆக கொடுத்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவேளை விஜய் படம் இல்லையென்றால் சன் பிக்சர்ஸ் இன் டார்கெட் சூப்பர் ஸ்டார் தான் எனவும் கூறப்படுகிறது.

Also Read: லிப் லாக், டேட்டிங் என மன்மதனாகவே வாழ்ந்த நடிகர்.. வரிசையாக காதலிகள் கழட்டி விட இதுதான் காரணம் 

இது ஒரு புறம் இருக்க ரஜினி, லோகேஷ் இயக்கத்தில் மேற்கொள்ள போகும் படம் தான் தலைவர் 171. ஒருவேளை இப்படத்தை லோகேஷ் கைவிடப்பட்டால், அட்லீயின் மார்க்கெட் உயர்வது நிச்சயம். இருப்பினும் தலைவர் ரஜினி கொடுத்த வாய்ப்பினை லோகேஷ் ஒரு போதும் தவறவிட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக டிமாண்டில் இருந்து வரும் அட்லீ ஒரு பக்கம், மேலும் தன் அடுத்த கட்ட படங்களை மேற்கொள்ள போகும் லோகேஷ் மறுபக்கம். அவ்வாறு போட்டிக்கு போட்டியாய் பார்க்கப்படும் இவர்களின் படங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது சன் பிக்சர்ஸ்.

Also Read: நீங்க ஜெயிலர் படம் பாக்குறதுக்கு முக்கியமான 8 காரணங்கள்.. நாளுக்கு நாள் எகிறும் இதயத்துடிப்பு

- Advertisement -