பிரபல தொகுப்பாளினியை தட்டி தூக்கிய விஜய் டிவி.. பிக்பாஸ் மூலம் ஜீ தமிழுக்கு வச்ச ஆப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ரசிகர்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். தற்போது தமிழ்நாட்டின் ஆஸ்தான சேனலாக விஜய் டிவி மாறி, டிஆர்பியிலும் சாதனை புரிந்து வருகிறது.

அதேபோல் விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற  நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். அவ்வப்போது விழாக்காலங்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்குவார்.

ஆனால் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 4 பிரபலமான அர்ச்சனா தொகுப்பாளினியாக களமிறங்கி இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பு அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக  பணியாற்றி வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

தற்போது விஜய் டிவியில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ள ‘காதலே காதலே’ எனும் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக அர்ச்சனா களம் இறங்க உள்ளாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

ஏற்கனவே ஜீ தமிழ் சேனலுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் VJ அர்ச்சனா விஜய் டிவியில் உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று கூறப்பட்டது.

இப்படி இருக்க தற்போது விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியை தட்டி தூக்கி விட்டு அர்ச்சனா களமிறங்கி  இருப்பதைப் பார்த்த பலர், ‘விஜய் டிவியில் இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று கூறுகின்றனர், அதுவும் உண்மை தானே!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்