ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ரஜினி, விஜய்க்காக நடக்கும் போர்.. இணையத்தையே அல்லோலப்படுத்தும் மட்டமான செயல்

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி தற்போது உள்ள டாப் நடிகர்களிடம் கடுமையாக இருந்து வருகிறது. அதாவது இப்போது ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் உள்ளார். தற்போது வரை தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் ரஜினி இருந்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்ற பேச்சு பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.

வாரிசு பட விழாவில் கூட சில பிரபலங்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று புகழ்ந்து பேசி இருந்தார்கள். அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் விஜய் மௌனமாக இருந்தது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனால் அடிக்கடி இணையத்தில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் மோதி கொண்டு வந்தனர்.

Also Read : மொத மொதல்ல சினிமால அத உடைச்சது தலைவர் தான்.. ரஜினியின் ரகசியத்தை உடைக்கும் நட்டி

இந்நிலையில் விஜய் அதிக ரீமேக் படங்களில் நடிப்பதாக ரஜினி ரசிகர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். அதாவது விஜய்யின் போக்கிரி, கில்லி, நண்பன் என பல ரீமேக் படங்களில் விஜய் நடித்துள்ளார். ஆகையால் ஒரு ரீமேக் ஸ்டார் தான் விஜய் என ரஜினி ரசிகர்கள் கேலி செய்தனர்.

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் ரஜினியின் படத்தை ஆராய தொடங்கினர். அப்போது தான் ரஜினி 50-க்கும் மேற்பட்ட ரீமேக் படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக சந்திரமுகி, அண்ணாமலை போன்ற ரஜினிக்கு பிளாக்பஸ்டர் ஹிட் படம் கொடுத்தவைகள் அனைத்துமே ரீமேக் படங்கள் தான்.

Also Read : திருமணத்திற்கு பின்னும் ரஜினிக்கு தொடர்ந்த பிரச்னை .. பாலசந்தரிடம் சரணடைந்த லதா ரஜினிகாந்த்

இதை அறிந்த விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா, ரஜினியை கேலி கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் பிரச்சனை இப்போது பூதாகரமாக வெடித்து இணையத்தையே அல்லோலபடுத்தி வருகிறது. மேலும் கோலிவுட் சினிமாவின் பிரைடு ரஜினி தான் என்ற ஹேர்டேகை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

அதேபோல் கோலிவுட் கிங் தளபதி என்று விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் வருகிறார்கள். இவ்வாறு விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் மோதிக் கொள்வது தொடர்ந்து வாடிக்கையாக இருந்து வருகிறது. இதில் ரஜினி மற்றும் விஜய் தலையிட்டு அவர்களது ரசிகர்களிடம் அறிவுரை கூறினால் மட்டுமே இந்த இணைய போர் முடிவுக்கு வரும்.

Also Read : அவங்க ரசிகர்களை குஷிப்படுத்த தில்ராஜு செய்த கேவலமான வேலை.. மேடையில் விஜய்யால் ஏற்பட்ட சர்ச்சை

- Advertisement -

Trending News