பாலா நிலைமை நமக்கும் வந்திடக் கூடாது.. வாடிவாசல் கூட்டணி பிளவா? பதறிய தயாரிப்பாளர், சூர்யா

சூர்யா, பாலா கூட்டணியில் உருவான வணங்கான் படத்தில் இருந்து பாதியில் இருந்தே சூர்யா விலகி விட்டார். ஆகையால் இப்போது வணங்கான் படத்தில் அருண் விஜயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த சூழலில் வணங்கான் படத்திற்கு முன்னதாகவே சூர்யா கமிட்டான படம் வெற்றிமாறனின் வாடிவாசல்.

ஜல்லிக்கட்டை வைத்து எடுக்கப்பட உள்ள இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருந்தது. ஆனால் இந்த படம் பாதியிலேயே கைவிடப்பட உள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது. காரணம் சமீபத்தில் ஓடிடியில் வெளியான பேட்டை காளி வெப் சீரிஸை வெற்றிமாறன் தயாரித்ததாக பெயர் போடப்பட்டிருந்தது.

Also Read : சினிமாவைத் தாண்டி 5 பிசினஸில் மிரள விடும் சூர்யா.. இப்படியும் சம்பாதிக்கலாமா என ஆச்சரியத்தில் கோலிவுட்

இந்த தொடரும் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் இப்போது வாடிவாசல் படம் வெளியானால் அந்த அளவுக்கு ரசிகர்களின் கவனம் ஈர்க்காது என்ற முடிவில் சூர்யா உள்ளாராம். இந்நிலையில் வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா வெளியேறப் போவதாக வெளியான செய்தி வதந்தியே என தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

அதாவது வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இணையத்தில் ஒரு தவறான செய்தி பரவி வருவதாக கூறியுள்ளார். மேலும் வாடிவாசல் படம் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், அனிமேட்ரானிக் செயல்முறைகளுக்காக வெளிநாடுகளுக்கு வீடியோ காட்சியை குழு அனுப்பி உள்ளதாம்.

Also Read : அந்த ஒரு விஷயத்தில் சூர்யாவை அடிச்சுக்க ஆளே இல்ல.. அடுத்து உடைய போகும் அஜித், விஜய்யின் மார்க்கெட்

மேலும் சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் படு பிஸியாக உள்ளார். இந்த படம் 3d அனிமேஷனில் உருவாகி வருவதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு தான் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறாராம்.

அதுமட்டுமின்றி வெற்றிமாறனும் இப்போது விடுதலை பட வேலையில் மும்மரம் காட்டி வருகிறார். நீண்ட வருடங்களாக உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர காத்திருக்கிறது. இவ்வாறு சூர்யா மற்றும் வெற்றிமாறன் தங்கள் படவேலையை முடித்து உடன் வாடிவாசல் பட வேளையில் ஈடுபட உள்ளனர்.

Also Read : 2 கோடிக்கு ஆசைப்பட்ட மொத்தத்தையும் இழந்த வெற்றிமாறன்.. பாலாவை போல் தூக்கி எறிந்த சூர்யா