பாகுபலி, ஆர்ஆர்ஆர் பிறகு துணிவு தான்.. இத்தனை வருடத்திற்கு பிறகு தடைகளை தகர்த்தெறிந்த அஜித்

பொங்கல் திருநாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு வெளியான துணிவு திரைப்படம் இப்போது வரை ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் படத்தில் சொல்லப்பட்டுள்ள தரமான மெசேஜ் மற்றும் அதை அஜித் சிறப்பாக நடித்து வெளிப்படுத்தியது தான்.

துணிவு திரைப்படம் வெளியாகி தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களிலும் வெற்றி பெற்று வருகிறது. துணிவு படத்தை பற்றி அமெரிக்காவில் உள்ள பத்திரிகைகள் பக்கம் பக்கமாக புகழ் தள்ளுகின்றனர். இதனால் அமெரிக்காவின் துணிவு படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸை மிரட்டுகிறது.

Also Read: இனி ஒரு உயிர் போகக்கூடாது, ஆட்டமெல்லாம் வாரிசு துணிவோடு முடிஞ்சு.. அஜித், விஜய் எடுத்த அதிரடி முடிவு

‘இந்திய படங்கள் பாகுபலி, ஆர்ஆர்ஆர் எங்களை சந்தோஷப்படுத்தியது. அந்த வகையில் தற்பொழுது தென்னிந்திய படமான துணிவு என்ற படம் திரையரங்குகளில் அமெரிக்க வாழ் மக்களை குதூகலப்படுத்தி இருக்கிறதாம். அதில் நடித்த ஓல்ட் கெட்டப்பில் வரும் அஜித் எங்களை சந்தோஷப்படுத்தும் அளவிற்கு படம் நன்றாக உள்ளது’ என்று கூறியிருக்கிறார்கள்.

இதனால் அமெரிக்காவில் இந்த படத்தினை பார்க்க அனைவரும் ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அடுத்தடுத்த ஷோவிற்கான டிக்கெட் விற்பனைகள் படுச்சோராக நடந்து கொண்டிருக்கிறது. ரசிகர்களிடமும் துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Also Read: யார் நம்பர் ஒன்.. பரபரப்பான வசூல் விவரத்தை வெளியிட்ட சென்னை தியேட்டர்

அதுமட்டுமின்றி அமெரிக்காவிலும் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை துணிவு படத்தை திரையரங்கில் பார்ப்பதன் மூலம் செலப்ரேட் செய்கின்றனர். இதுவரை அஜித் படம் வெளிநாட்டில் பெரியதாக வெற்றி பெற்றதில்லை. இந்த படத்தின் மூலம் முதல் படிக்கட்டை எடுத்து வைத்திருக்கிறார் அஜித்.

பொதுவாக தமிழகத்தில் அஜித்துடன் மற்ற கதாநாயகர்களின் படங்கள் வெளிவந்தால், அஜித்தின் படம் தான் வசூலில் முன்னிலை வகிக்கும். ஆனால் மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் அஜித்தின் படத்திற்கு இதுவரை போதிய வரவேற்பு கிடைக்காமல் இருந்த நிலையில், துணிவு அதை மாற்றி அமைத்திருக்கிறது. இதை வைத்து தல ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் கெத்து காட்டுகின்றனர்.

Also Read: 12 ஆயிரம் கோடி நிஜ கொள்ளையை வெளிச்சம் போட்டு காட்டிய வினோத்.. துணிவு படத்தில் மறைந்திருக்கும் உண்மை