அதிமுக தொண்டரின் குழந்தையை தூக்கி கொஞ்சிய முதல்வர்.. பிரச்சாரத்தில் நிகழ்ந்த நெகிழ வைக்கும் சம்பவம்!

தற்போது தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இவரது நலத்திட்டங்களால் தமிழ்நாடு பெருமளவு முன்னேறி உள்ளதை கண்ட மக்கள் அனைவரும், முதல்வர் பழனிசாமிக்கு பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாவட்டம் மாவட்டமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், எடப்பாடியார் நேற்று ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில்  பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்தப் பிரச்சார கூட்டத்தின்போது, அதிமுக தொண்டர் ஒருவரின் குழந்தையை தூக்கி கொஞ்சியுள்ளார் எடப்பாடியார். அதுமட்டுமில்லாமல், பிரசாரத்திற்கு வந்த முதல்வருக்கு வழியெங்கும் மலர்தூவி அவருக்கு ஈரோடு மாவட்ட மக்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

மேலும் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வரின் வேனை சுற்றி மக்கள் திரண்டு இருந்ததைப் பார்க்க ஊரே திருவிழா போல காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்திற்கு இடையே அம்மா இரட்டை இலை உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்த அட்டைகளை தொண்டர்கள் உற்சாகத்துடன் காட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

edappadi-baby
edappadi-baby

அப்போது எடப்பாடியாரோ, ‘உங்களது மகத்தான ஓட்டுகளை இரட்டை இலை சின்னத்திற்கு அளியுங்கள்’ என்று இரட்டை இலை சின்னத்தை காட்டி வாக்குகளை சேகரித்து உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்