ஆடை கிழிந்து, தலை முடியை பிடித்து நடந்த ஆக்ரோஷமான சண்டை.. நீயா நானா என போட்டி போட்ட நடிகைகள்

சினிமாவில் போட்டி பொறாமை இருப்பது சகஜம்தான். அதிலும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது யார் என்ற போட்டி நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் நடிகைகளுக்கும் இருக்கிறது. அதனாலேயே சில நடிகைகள் நேரில் பார்த்தால் கூட ஒருவருக்கொருவர் முகத்தை திருப்பிக் கொண்டு செல்வார்கள். இப்படி எத்தனையோ விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இரு நடிகைகளுக்குள் மிக ஆக்ரோஷமான ஒரு போட்டி நடந்து இருக்கிறது. சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயின்களுள் ஒருவராக இருந்தவர்தான் அந்த நாயகி. தொடை அழகுக்கு பெயர் போன அந்த நடிகை ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனார். அதே திரைப்படத்தில் லட்சுமிகரமான நடிகை ஒருவரும் நடித்தார்.

Also read: 17 வயது சிறிய பெண்ணுடன் ஏற்பட்ட காதல்.. 3வது திருமணத்திற்காக நடிப்புக்கு குட்பாய் சொன்ன நடிகர்

ஒரு ஹீரோயின் நடித்தாலே படத்திற்கு ஏகப்பட்ட சிக்கல்கள் வரும். இதில் இரண்டு ஹீரோயின்கள் ஒன்றாக நடிக்க வேண்டும் என்றால் அந்த பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் நிலையை நினைத்துப் பாருங்கள். ஆரம்பத்தில் அந்த படத்தின் சூட்டிங் நன்றாக தான் சென்று இருக்கிறது. ஆனால் போகப் போக இரு நடிகைகளுக்கும் நீயா நானா என்ற போட்டி வந்திருக்கிறது.

நான்தான் சீனியர் நடிகை எனக்கு தான் நடிப்பு வரும் என்றும் நான் இளம் நடிகை எனக்கு தான் மார்க்கெட் அதிகம் என்று இரு நடிகைகளும் மறைமுகமாக போட்டி போட்டு வந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இந்த சண்டை முற்றிப்போய் ஷூட்டிங் ஸ்பாட்டையே ரணகளமாக்கி இருக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிப்பதற்காக இருவரையும் இயக்குனர் அழைத்திருக்கிறார். அப்போது இரு நடிகைகளுக்கும் பயங்கர வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது.

Also read: கைக்கு அடக்கமா இல்ல, நடிகையை வேண்டாம் என ஒதுக்கிய கட்டுமஸ்தான் நடிகர்.. பலான ரூட்டில் சான்ஸ் வாங்கிய மாமி

அது கொஞ்சம் அதிகமாகி கைகலப்பு வரை சென்றிருக்கிறது. ஒருவர் தலைமுடியை இன்னொருவர் பிடித்துக் கொண்டு ஆடைகளை எல்லாம் கிழித்து படுமோசமாக சண்டை போட்டு இருக்கின்றனர். இதனால் அதிர்ந்து போன படகு குழுவினர் இருவரையும் சமாதானம் செய்ய முடியாமல் தவித்திருக்கின்றனர். தாங்கள் அலங்கோலமாக இருக்கும் நிலையிலும் கூட அந்த இரண்டு நடிகைகளும் சண்டை போடுவதை நிறுத்தவில்லையாம்.

அதன் பிறகு இயக்குனர் இருவரையும் தனித்தனியாக நடிக்க வைத்து காட்சிகளை படமாக்கி இருக்கிறார். இப்படி அடித்துக் கொண்ட அந்த இரு நடிகைகளும் இப்போது பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றனர். அதில் சீனியர் நடிகை புளியங்கொம்பாக ஒருவரை பிடித்து திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.

Also read: ஈசிஆர்-ல காஸ்ட்லி பங்களா வாங்கி கொடுத்த டாப் நடிகர்.. தாலி கட்டாமலேயே குடும்பம் நடத்திய நடிகை

- Advertisement -