கமலுக்கு அம்மாவாக நடிக்க இருந்த நடிகை.. மனோரமாவால் வாய்ப்பிழந்த சம்பவம்

Actress Manorama: தன்னை சகலகலா வல்லவனாய் தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்திக் கொண்டவர் தான் கமலஹாசன். இந்நிலையில் இவர் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த ஒரு நடிகைக்கு ஏற்பட்ட சம்பவத்தை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

கமல் நடிப்பில் வெளிவந்து வெற்றி கண்ட படங்களில் ஒன்று தான் அபூர்வ சகோதரர்கள். 1989ல் சீனிவாச ராவ் இயக்கத்தில் சுமார் 200 நாட்களுக்கு மேல் திரையில் ஓடி வெற்றி கண்டது. மேலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெற்றி கண்ட இப்படம் இன்று வரை கமலின் பெயர் சொல்லும் படமாக இருந்து வருகிறது.

Also Read: 53 வயதாகும் அரவிந்த்சாமியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு.. சினிமா, பிசினஸ் என ரவுண்டு கட்டும் சாக்லேட் பாய்

இரட்டை கதாபாத்திரம் ஏற்கும் கமலின், வளர்ப்பு தாயாக மனோரமா இடம்பெற்றிருப்பார். மெக்கானிக் ராஜா கதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பார். இவரின் சேட்டைக்கு ஈடு கட்டும் கதாபாத்திரமாக மனோரமா இணைந்து கலக்கி இருப்பார். படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இக்கதாபாத்திரத்தில் முதலில் வடிவுக்கரசி தான் நடிப்பதாக இருந்ததாம்.

அதை தொடர்ந்து இத்தகைய கதாபாத்திரம் ஏன் மனோரமா பண்ண கூடாது என படப்பிடிப்பின் போது கடைசி நிமிடத்தில் பஞ்சு அருணாச்சலம் யோசனையில் மாற்றப்பட்டதாம். அதனால் அப்போது படப்பிடிப்பிற்கு வந்த வடிவுக்கரசியிடம் இக்கதாபாத்திரத்திற்கு பேசப்பட்ட தொகையை கொடுத்து இந்த கேரக்டர் உங்களுக்கு சரி வராது ஆகையால் அடுத்த படத்தில் பார்த்துக்கலாம் என கூறப்பட்டதாம்.

Also Read: பூஜையே போடல அதுக்குள்ள ஆரம்பித்த பஞ்சாயத்து.. 200 கோடியால் விஜய்க்கு கிளம்பிய சிக்கல்

அதைத்தொடர்ந்து தான் இப்படத்தில் மனோரமா நடிக்க நேர்ந்ததாம். மேலும் வடிவுக்கரசி உன் மனதில் ஏதோ நினைத்து விட்டாய் ஆகையால் தான் வேண்டாம் என சொல்கிறாய் பரவாயில்லை என்றும் ஒப்புக்கொண்டாராம். பன்முக திறமை கொண்டவர் தான் பஞ்சு அருணாச்சலம்.

இவரின் யோசனைக்கிணங்க இப்படத்தில் இவர்கள் கூட்டணியில் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இரு நடிகைகளும் மூத்த நடிகைகளாய் வலம் வந்த அந்த காலகட்டத்தில் இது போன்ற நிகழ்வு எந்த சம்பவத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பஞ்சு அருணாச்சலம் கணிப்பில் மேற்கொண்ட கதாபாத்திரம் இப்படத்திற்கு கூடுதல் வெற்றியை பெற்று தந்தது.

Also Read: ஆண்டவர் என கமலுக்கு பெயர் வர இதுதான் காரணம்.. உலக நாயகனிடம் முட்டி மோதி முக்குடைந்த சினிமா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்