சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

காதல் என்ற பெயரில் செய்த நம்பிக்கை துரோகம்.. 40 வயதிலும் திருமணம் செய்யாமல் காத்திருந்து ஏமாந்த நடிகை

40 வயதை கடந்த பிரபல நடிகை ஒருவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். திறமையான நடிகை என பெயர் பெற்ற அவர் ஒரு காலத்தில் பிஸியான நடிகையாக இருந்தார். அது மட்டுமல்லாமல் இவருடைய கால்சீட்டுக்காக காத்திருந்த நடிகர்களும் உண்டு.

ஆனால் இப்போது அவருக்கு பெரிய அளவில் படங்கள் எதுவும் கைவசம் இல்லை. பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் நடிகை ஒரு நடிகருடன் மட்டும் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போடுகிறாராம். அதற்கு முக்கிய காரணம் அந்த நடிகர் காதல் என்ற பெயரில் செய்த நம்பிக்கை துரோகம் தான்.

Also read: 53 வயது நடிகருடன் காட்டிய ஓவர் நெருக்கம்.. சம்பளம் வாங்காமல் ஐட்டம் டான்ஸ் ஆடிய நடிகை

தற்போது உலக அளவில் பிரபலமாக இருக்கும் அந்த நடிகர் நடிகையுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவர்களின் ஜோடி பொருத்தத்தை பார்த்து நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் இணைய வேண்டும் என வேண்டுகோள் வைத்த ரசிகர்களும் இருக்கிறார்கள். அதற்கேற்றார் போல் அந்த ஜோடியும் பொது இடங்களில் நெருக்கமாகவே சுற்றி வந்தனர்.

இதனால் இவர்களுடைய திருமணத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் காத்திருந்தது. ஆனால் அதற்கான பலன் என்னவோ பூஜியம் தான். ஏனென்றால் நடிகர் இளம் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அரசல் புரசலாக செய்திகள் வெளிவர தொடங்கியது. அதை உறுதி செய்யும் வகையில் பல விஷயங்களும் நடந்து அதிர்ச்சியை கிளப்பியது.

இந்த விவகாரத்திற்கு பிறகு தான் நடிகைக்கும், நடிகருக்கும் இடையே ஏதோ மன வருத்தம் ஏற்பட்டிருப்பது பலருக்கும் தெரிய வந்தது. அதன் பிறகே நடிகை இனிமேல் அவருடன் இணைந்து நடிக்க கூடாது என்ற முடிவையும் எடுத்திருக்கிறார். அந்த வகையில் 40 வயது வரை திருமணத்திற்காக காத்திருந்த அந்த நடிகையை காதலர் ஏமாற்றியது பற்றிய செய்தி தான் இப்போது பூகம்பமாக வெடித்திருக்கிறது.

Also read: மவுஸ் இருக்கும்போது பங்களா காருனு வாங்கிப்போம்.. அட்ஜஸ்ட்மென்ட்க்கு டாப் நடிகை விரிக்கும் வலை

- Advertisement -

Trending News