நாகார்ஜுனாவை நம்பி மோசம் போன நடிகை.. சொதப்பிய பிக்பாஸ் என்ட்ரி, பழைய ரூட்டுக்கு திரும்பிய கேவலம்

Nagarjuna-Biggboss: தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் சக்கை போடு போட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இங்கு ஆண்டவருடைய பேச்சுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ அதேபோன்று தெலுங்கில் இதை தொகுத்து வழங்கி வரும் நாகர்ஜுனாவுக்கும் உள்ளது.

அதனாலேயே தமிழ் பிரபலங்கள் கூட தெலுங்கு பிக்பாஸில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசனில் ஷகிலா, முத்தின கத்திரிக்காய் கிரண் ஆகியோர் அசத்தல் என்ட்ரி கொடுத்தது நிகழ்ச்சிக்கு பக்க பலமாக அமைந்தது. ஆனால் ஒரே வாரத்தில் கிரண் எவிக்ட் செய்யப்பட்டது உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனென்றால் அவர் நிச்சயம் தமிழ் பிக்பாஸில் தான் கலந்து கொள்வார் என்று ஆணித்தரமாக கூறப்பட்டது. அதற்கேற்றார் போல் அவர் சோசியல் மீடியாவில் இளம் நடிகைகளே பொறாமை கொள்ளும் அளவுக்கு கவர்ச்சியை காட்டி ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பினார். இதனால் சமூக வலைதளமே பற்றி எரிந்த கதையும் உண்டு.

இப்படி ஓவர் அட்டூழியம் செய்த இவரை வளைத்து போடுவதற்கு விஜய் டிவியும் முயற்சி செய்தது. ஆனால் அதற்கு முன்பே நாகார்ஜுனா முந்தி கொண்டது இங்குள்ள ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஆனால் எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் ஒரே வாரத்தில் வெளியேறிய அவர் மீண்டும் பழைய ரூட்டுக்கு திரும்பி விட்டாராம்.

அதன்படி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் கிரணுக்கு வழக்கத்தை விட அதிகமாக லைக்குகள் குவிந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் விட்டதை மீண்டும் பிடிக்கும் வகையில் அவர் இப்போது படுமோசமாக உடையணிந்து போட்டோ ஷூட் செய்து வெளியிட்டு வருகிறார்.

கண்ணை கூசும் அளவுக்கு கேவலமான போட்டோக்களை களம் இறக்கி வரும் இவருக்கு எதிர்ப்பலைகளும் ஒரு பக்கம் கிளம்பி வருகிறது. இப்படியாக நாகார்ஜுனாவை நம்பி பிக்பாஸுக்கு சென்று மொக்கை வாங்கிய கிரண் மீண்டும் தன் சோசியல் மீடியா பிசினஸை அமோகமாக ஆரம்பித்து கல்லா கட்ட தயாராகி இருக்கிறார்.