ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அடுத்த குடும்பத்தில் கும்மியடிக்கும் நடிகை.. அந்தரத்தில் தொங்கும் ஹீரோவின் வாழ்க்கை

திருமண வயதை கடந்தும் சிங்கிளாகவே சுற்றும் நடிகை இப்போது ஓவர் அலும்பு பண்ணி வருகிறார். அதாவது நடிகை ஆரம்பத்தில் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் நடுவில் தொடர் பிளாப் கொடுத்ததால் அக்கட தேசத்திற்கு சென்று விட்டார். அதன் பிறகு ஓவர் நைட்டில் மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விட்டார்.

அதாவது ஒரு படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த சூழலில் மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அவ்வாறு மாஸ் ஹீரோவின் படத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே சில படங்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் மாஸ் ஹீரோவின் மனைவி மீண்டும் இந்த நடிகையுடன் நடிக்க கூடாது என கண்டிஷன் போட்டிருக்கிறார். சில காலம் இதை கடைப்பிடித்து வந்த ஹீரோ ஆனால் சமீபத்தில் அவருடன் தான் நடிப்பேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட ஹீரோவின் மனைவி தனது அப்பா வீட்டிற்கு புறப்பட்டு விட்டார்.

அதேபோல் படத்திலும் நெருக்கமான காட்சிகள் வைக்கும்படி மாஸ் ஹீரோ சொல்லி இருக்கிறார். இந்நிலையில் நடிகை இப்போது ஒரு ஹீரோவின் வாழ்க்கையை சின்னா பின்னம் ஆக்கிய நிலையில் அடுத்ததாக மற்றொரு ஹீரோவின் வாழ்க்கையும் அந்தரத்தில் தொங்க இருக்கிறது. அதாவது இப்போது நடிகை ஒரு புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

அந்த ஹீரோவும் ஏற்கனவே நடிகையுடன் ஜோடி போட்டு நிலையில் செய்தித்தாள்களில் கிசுகிசுக்கள் வெளியானது. இப்போது இவர்கள் மீண்டும் இணைவதால் அவர்கள் குடும்பத்திலும் சச்சரவு ஏற்பட்டிருக்கிறதாம். கணவன், மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலரும் இந்த ஜோடியை ஆச்சரியப்பட்டு பார்த்திருந்தனர்.

இப்போது அவர்களது குடும்பத்திலும் பிரச்சினை வெடிப்பதற்கு நடிகை தான் காரணமாக இருக்கிறார். இன்னும் எத்தனை பேர் வாழ்க்கையை நடிகை கெடுக்க இருக்கிறாரோ என கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு நடிகை ரீ என்ட்ரி கொடுக்காமலே இருந்திருக்கலாம் எனவும் விளாசி வருகிறார்கள்.

- Advertisement -

Trending News