குடும்பத்திற்காக தியாகம் செய்து வாழ்க்கையை அழித்துக் கொண்ட நடிகை.. மொத்த சொத்தும் பறிபோய் நின்ற பரிதாபம்

ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக புகழின் உச்சியில் இருந்தவர் தான் இந்த நடிகை. குடும்பத்திற்காக பல தியாகங்களை செய்த இவர் ஒரு கட்டத்தில் தன் வாழ்க்கையைக் கூட பெரிதாக நினைக்காமல் பெற்றவர்களுக்காக வாழ்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட நடிகையை சொத்துக்காக ஏமாற்றி இருக்கிறது அவரின் குடும்பம்.

அந்த நடிகை வேறு யாரும் அல்ல திறமையான நடிகை என்று பெயரெடுத்த பானுப்ரியா தான். அழகான கண்களும், நம் வீட்டுப் பெண் போன்ற அழகுடனும் இருக்கும் இவர் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கும் இவர் இப்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Also read: அப்பா எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்.. தாலி மீது நம்பிக்கை இல்ல, அந்தரங்க வாழ்க்கை வாழும் வாரிசு நடிகை

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே இவர் வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஆனால் சில வருடங்களிலேயே கணவரை பிரிந்த இவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இப்படி சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் இவர் தன் குடும்பத்திற்காகவே வாரி வழங்கி இருக்கிறார்.

ஆனாலும் அவர் பெயரில் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் அவரின் அம்மா, அப்பா, தங்கை ஆகியோர் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டார்களாம். அதிலும் இவருக்கு சொந்தமான வீட்டை பொய் கூறி தங்கள் பெயருக்கு மாற்ற வைத்திருக்கிறார்கள். இருப்பினும் அவர் சீரியலில் நடித்து சம்பாதித்த அந்த பணத்தை எல்லாம் தனக்காக சேர்த்து வைத்திருக்கிறார்.

Also read: ஜோதிகாவால் மொத்த காசையும் இழந்த நடிகை.. அரசனை நம்பி புருசனை கைவிட்ட ஹீரோயின்

ஆனால் அப்போது நடந்த பிரச்சனையின் காரணமாக இவரை சொந்த குடும்பமே வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறது. அப்பொழுதுதான் இவர் தன் கணவருடன் சேர்ந்து வாழ்வது நல்லது என புரிந்து கொண்டாராம். அதன் பிறகு அவருடன் சேர்ந்து வாழ்ந்த நடிகைக்கு அந்த மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை. உடல் நலக்குறைவின் காரணமாக அவரும் சில வருடங்களிலேயே இறந்து போனார்.

அதன் பிறகு தன் மகளுக்காகவே வாழும் பானுப்பிரியா தற்போது அவரை வெளிநாட்டில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் முன்பு போல் அவரால் நடிக்க முடியவில்லை. ஏனென்றால் சமீபகாலமாக அவருக்கு ஞாபக மறதி அதிகமாக இருக்கிறது அதற்கான சிகிச்சையில் இருக்கும் அவர் ஒருபோதும் சினிமாவை விட்டு விலக மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இப்படி குடும்பத்திற்காக தியாகம் செய்த இந்த நடிகையை நினைத்தால் பலருக்கும் வருத்தமாக தான் இருக்கிறது.

Also read: அந்தரங்க காட்சிகளுக்கு அடித்தளம் போட்ட முதல் திரைப்படம்.. சன்னி லியோனுக்கு முன்னோடி இவங்க தான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்