ஜெய்சங்கரை காதலிப்பதாக ஏமாற்றிய தில்லானா நடிகை.. ஆண் பாவத்தால் நடுத்தெருவுக்கு வந்த கொடுமை

ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்படும் ஜெய்சங்கர் திரையுலகில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் ஒரு பக்கா ஜென்டில்மேனாக தான் வாழ்ந்தார். இவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட இவரை ஒரு நடிகை காதலிப்பதாக ஏமாற்றி இருக்கிறார். இது அந்த காலகட்டத்தில் பலருக்கும் தெரியும்.

நாட்டிய பேரொளி என்றும் தில்லானா மோகனாம்பாள் என்றும் அழைக்கப்படும் நடிகை பத்மினியை தான் ஜெய்சங்கர் மனமார காதலித்திருக்கிறார். பத்மினிக்கும் இவர் மீது ஒரு ஈர்ப்பு இருந்திருக்கிறது. இருவரும் இணைந்து சில திரைப்படங்களில் நடித்ததன் காரணமாக அவர்களுக்குள் ஒரு நல்ல நட்பும் இருந்தது.

Also read: ஜெய்சங்கர் போல் விஜய் சேதுபதிக்கு வந்த நிலைமை.. அந்த 2 படத்தால் மொத்த கேரியருக்கும் வந்த சோதனை

அதனாலேயே ஜெய்சங்கர், பத்மினிக்கு பட வாய்ப்புகளையும் பெற்று தந்திருக்கிறார். இதை பார்த்து இம்ப்ரஸ் ஆன பத்மினி அவரை காதலிக்க தொடங்கி இருக்கிறார். இப்படி இவர்களுடைய காதல் வெளியில் சொல்லப்படாமலேயே வளர்ந்திருக்கிறது. ஆனால் இந்த விஷயம் மீடியாவில் எப்படியோ வெளியாகி விட்டது.

இதை பார்த்த பத்மினிக்கு நெருக்கமானவர்கள் எல்லோரும் அவருக்கு ஏராளமான அறிவுரைகளை கூறியிருக்கின்றனர். அதாவது ஜெய்சங்கரை நீ காதலிப்பது தவறு கிடையாது. ஆனால் மற்ற நடிகர்கள் தங்கள் படத்தில் உனக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். அவர்களின் ரசிகர்களும் உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அவர் மனதை கலைத்திருக்கின்றனர்.

Also read: ஜெய்சங்கர் போலவே எந்த சர்ச்சையிலும் சிக்காமல் ஒரே ஹீரோ.. மக்களை கவர்ந்த நாயகன்!

அதன் காரணமாக பத்மினியும் தன் முடிவை மாற்றிக் கொண்டாராம். ஆனால் இது தெரியாமல் ஜெய்சங்கர் தன் காதலை அவரிடம் கூறிய போது வேண்டாம் என்று அவர் தட்டி கழித்திருக்கிறார். இப்படி ஒரு பெண்ணை நம்பி அசிங்கப்பட்டு விட்டோமே என்று அவர் ரொம்பவும் நொந்து போயிருக்கிறார். ஆனாலும் இது சம்பந்தமாக பத்மினியிடம் அவர் எந்த பிரச்சனையும் செய்யவில்லையாம்.

படப்பிடிப்பில் கூட அமைதியாகவே வலம் வந்திருக்கிறார். இதை பார்த்த பத்மினி ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் மனம் வெறுத்துப் போய் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கூறியிருக்கிறார். அதாவது பெண் பாவம் மட்டுமல்ல ஆண்பாவமும் பொல்லாதது என்று மட்டும் கூறியிருக்கிறார். அவர் கூறியபடியே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பத்மினி மிகவும் கஷ்டங்களை அனுபவித்தாராம்.

அதிலும் அவருடைய திருமண வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். இதற்கெல்லாம் மூல காரணம் அவர் ஜெய்சங்கர் போன்ற நல்ல மனிதரை காயப்படுத்தியது தான். இப்படி ஒரு ஆணின் பாவத்தை வாங்கிக் கொண்டு நடுத்தெருவுக்கு வரும் அளவிற்கு அவர் பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார்.

Also read: 5 ரூபாய் சம்பளத்தில் நடித்த ஜெய்சங்கர்.. அதே படத்தில் ஸ்ரீபிரியா சம்பளத்தை கேட்டா அதிர்ச்சி ஆயிடுவீங்க

- Advertisement -