திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

நடிகையாக ஆசைப்பட்டு கடைசி வரை சின்ன வீடு என முத்திரை குத்தப்பட்ட நடிகை.. கவுண்டமணி முதல் ராதாரவி வரை விட்ட ஜொள்ளு

ஒரு படத்திற்கு ஹீரோ, ஹீரோயின், வில்லன் எவ்வளவு முக்கியமோ அதே அளவு துணை கதாபாத்திரமும் முக்கியம். பல துணை நடிகர்கள் படங்களில் நடித்து வரும் நிலையில், சிலர் வாய்ப்பு கிடைத்து ஹீரோ, ஹீரோயின், நகைச்சுவை கதாபாத்திரம், இன்னும் சிலரோ இயக்குனர்களாக கூட மாறியுள்ளனர். அந்த வரிசையில் சில நடிகர், நடிகைகள் சினிமாவில் எதோ ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் போதும் என வருவார்கள்.

ஆனால் சிலரோ என்னதான் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தாலும், நடிகையாக வேண்டும், நடிகராக வேண்டும் என்ற ஆசையில், கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்வர். அப்படிதான் 90 காலக்கட்டத்தில் கவர்ச்சி நடிகையாக வந்த பிரபல நடிகை ஒருவர் ஹீரோயினாக ஆசைப்பட்டு தன் கனவு கடைசிவரை நிறைவேறாமல் போனதாக கூறியுள்ளார்.

Also Read: வாழ்ந்து, கேரியரை தொலைத்த 7 நடிகைகள்.. புகழின் உச்சத்தை ருசித்த சில்க் ஸ்மிதா

படங்களை இயக்கும், இயக்குனர்கள் யார், யாரை எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்பதை அதிகம் யோசிப்பார்கள். அதனடிப்படையிலேயே ஹீரோவின் அண்ணன், தம்பி, நண்பன், அமெரிக்கா மாப்பிள்ளை, ஹீரோயின், அக்கா, தங்கை, தாய், அப்பா உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்றார் போல் சில நடிகர்களை தேர்ந்தெடுப்பர்.

அந்த வகையில் சின்ன வீடு கதாபாத்திரம் என்றாலே இயக்குனர்கள் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்யப்பட்டவர் தான் நடிகை விசித்திரா. இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளியான தலைவாசல் படத்தில் மடிப்பு ஹம்சா என்ற கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்த விசித்ரா, தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர். அந்த வகையில் ராஜாதி ராஜா, ரகசிய போலீஸ் உள்ளிட்ட படங்களில் சின்ன வீடு கதாபாத்திரத்தில் நடித்தார்.

Also Read: கவுண்டமணியின் டைமிங்கை கச்சிதமாய் பிடிக்கும் 5 நடிகர்கள்.. கெமிஸ்ட்ரியில் பின்னி பெடலெடுத்த விஜய்

அதிலும் நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து பொண்ணு வீட்டுக்காரன் படத்தில் டயானா கதாபாத்திரத்தில் நடித்த விசித்திரா, டைட்டானிக் படத்தின் ரொமான்டிக் காட்சியை அப்படியே அப்படத்தில் கவுண்டமணியுடன் ரீமேக் செய்து அனைவரையும் சிரிக்க வைத்திருப்பார். மேலும் ரகசிய போலீஸ் படத்தில் அரசியல்வாதியாக இருக்கும் கவுண்டமணியின் சின்னவீடாக விசித்திரா நடித்திருப்பார்.

கவுண்டமணிக்கு அடுத்தபடியாக நடிகர் ராதாரவியுடன் விசித்திரா சில படங்களில் அவருக்கு சின்ன வீடாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ஒரு சில படங்களில் ஐட்டம் டான்சும் ஆடியுள்ளார். இப்படி பல சின்ன வீடு கதாபாத்திரத்தில் விசித்திரா நடித்ததால், அவரை சின்ன வீடு நடிகை என்றே முத்திரை பதிக்கப்பட்டது. தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன்4ல் போட்டியாளராக விசித்திரா பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:  சில்க் ஸ்மிதாக்கு போட்டியாக வந்த கிளாமர் நடிகை.. இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து வந்த பரிதாபம்

- Advertisement -

Trending News