Gossip: பொதுவாழ்வில் இருப்பதாலேயே நடிகைகள் பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தது போல் அவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அப்படிப்பட்ட வாழ்வு அமைவது கிடையாது.
அப்படித்தான் சினிமாவில் ஓரளவுக்கு தெரிந்த முகமாக நடித்த நடிகை திடீரென அடித்த அதிர்ஷ்டம் மூலம் பயங்கர பிரபலமானார். இருந்தாலும் எந்த தலைகணமும் இல்லாத நடிகைக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை.
இதனால் பார்ட்டி டேட்டிங் என பொழுதை கழித்த நடிகை நடிகர் ஒருவரை தீவிரமாக காதலித்தார். இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து இருக்கின்றனர். ஆனால் தற்போது அவரை பிரேக்கப் செய்து இருக்கிறார் அந்த நடிகை.
நம்ப வைத்து ஏமாற்றிய காதலன்
ஏனென்றால் திருமணம் என்ற பேச்சு வரும்போது நடிகர் தன் வேலையை காட்டி விட்டாராம். அது மட்டும் இல்லாமல் இருவரின் தனிப்பட்ட வீடியோக்களை வைத்து நடிகையை கார்னர் செய்திருக்கிறார்.
இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாத நடிகை குடிபழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். பலரும் கிண்டல் அடிக்கும் அளவுக்கு நிதானம் இல்லாமல் சில இடங்களில் அவர் இருந்திருக்கிறார்.
இப்படி சில மாதங்கள் கழிந்த நிலையில் தற்போது நடிகை அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்கிறாராம். ரசிகர்களின் செல்லக்குட்டியாக இருக்கும் இவருடைய நிலைமையை பார்த்து கோடம்பாக்கமே உச்சு கொட்டி வருகிறது.