மகளாக நடித்து கரிகாலனுக்கு காதலியாக மாறிய நடிகை.. பொன்னியின் செல்வனில் ஆச்சரியப்பட வைத்த கேரக்டர்

மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது வரலாறு காணாத அளவுக்கு வசூல் வேட்டை நடத்தி கொண்டிருக்கிறது. உலகம் எங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் மாபெரும் சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு இருந்த ஒரு கேரக்டர் தற்போது ரசிகர்களால் அதிக கவனம் பெற்றுள்ளது. அதாவது இதில் நந்தினி என்னும் வெயிட்டான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

Also read : நினைத்த மாதிரியே ஏற்பட்ட சிக்கல்.. பொன்னியின் செல்வனால் தவிக்கும் அண்ணன் தம்பி

அந்த கேரக்டரின் பிளாஷ்பேக் காட்சிகளில் சிறு வயது நந்தினியாக நடித்தவர்தான் சாரா அர்ஜுன். இவர் விக்ரமின் தெய்வத்திருமகள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதில் அவர் விக்ரமுக்கு மகளாக நிலா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

அதைத்தொடர்ந்து தமிழில் சைவம், விழித்திரு போன்ற திரைப்படங்களில் நடித்த சாரா தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்தப் படத்தில் அவர் ஆதித்த கரிகாலனுக்கு காதலியாக நடித்திருப்பார்.

Also read : எல்லாத்துக்கும் தயாராக இருக்கும் விக்ரம்.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பா.ரஞ்சித்

அந்த கதாபாத்திரத்தில் தான் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். இதைத்தான் தற்போது ரசிகர்கள் ஆச்சரியமாக பேசி வருகின்றனர். ஏனென்றால் விக்ரமுக்கு மகளாக நடித்த சாரா இந்த திரைப்படத்தில் காதலியாக நடித்துள்ளார். இது தமிழ் சினிமாவில் இயல்புதான்.

ஏனென்றால் ரஜினிக்கு மகளாக நடித்த மீனா பிற்காலத்தில் அவருடன் பல திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்தார். அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. அந்த வகையில் தற்போது டீன் ஏஜ் பெண்ணாக இருக்கும் சாரா அடுத்தடுத்த வருடங்களில் விக்ரமுக்கு ஜோடி போட்டு நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

aishwarya-rai-sara
aishwarya-rai-sara

Also read : வஞ்சத்தால் வீழ்த்தப்பட்ட ஆதித்த கரிகாலன்.. சோழ சாம்ராஜ்யத்தின் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சு