வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

என்னது ஏகே-வை பார்த்து ரொமான்ஸ் வரலையா? 16 வயது நடிகையை கெஞ்சி கட்டி பிடிக்க வைத்த அஜித்

Actor Ajith: அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பல நடிகைகள் கிடையாய் கிடக்கிறார்கள். ஆனால் அஜித்தை பார்த்து ஒரு நடிகைக்கு சுத்தமாக ரொமான்ஸ் வரவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது. அதாவது ஹீரோக்கள் தங்களை இளமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் சினிமாவுக்கு வந்த போது எப்படி இருந்தாரோ அதே போன்ற உடல் அமைப்பை தான் தற்போது வரை மெயின்டைன் செய்து வருகிறார். ஆனால் அஜித்தை பொறுத்தவரையில் அவர் எப்படி இருந்தாலும் ரசிகர்கள் ஏற்று கொள்கிறார்கள். இந்த சூழலில் அஜித் சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு சாக்லேட் பாயாக தான் வலம் வந்து கொண்டிருந்தார்.

Also Read : அஜித்தையும் சிக்க வைத்த பிரபல நிறுவனம்.. விடாமுயற்சிக்கு பின் உருவாகும் மாஸ் கூட்டணி

இந்நிலையில் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது காதல் மன்னன். அதேபோல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த திலோத்தமாவுக்கும் முக்கிய படமாக இப்படம் அமைந்தது. அப்போது அவருக்கு வெறும் 16 வயது தானாம். இந்த படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்றாலும் படக்குழு கட்டாயப்படுத்தி தான் நடிக்க வைத்தார்களாம்.

மேலும் அந்தப் படத்தின் இயக்குனர் சரண் சார் தான் என்னை எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அந்தப் படத்தில் நடிக்க வைத்தார். மேலும் எனக்கு ரொமான்ஸ் வராது என்பதை நன்றாக தெரிந்து கொண்ட இயக்குனர் ஒரே ஒரு ரொமான்ஸ் காட்சி மட்டும் வைத்துக் கொள்வதாக என்னிடம் கேட்டார். அந்த சமயத்தில் நானும் சரி என்று சொல்லி விட்டேன்.

Also Read : மகிழ் திருமேனியை அஜித் லாக் செய்ய முக்கிய காரணமாக இருந்த 5 படங்கள்.. நடிகராக எடுபடாமல் போன ரெண்டு படம்

அதாவது அஜித் சாரை கட்டிப்பிடிக்கும் படியான ஒரு காட்சி இருந்தது. ஆனால் அந்தக் காட்சி நடிக்கும் போது படபடப்பாக இருந்ததால் என்னால் நடிக்க முடியவில்லை. அப்புறம் அஜித் சாரே என்னிடம் வந்து நான் அழகா இல்லையா, என்ன பாத்தா லவ் வரலையா, லவ்வை ஃபீல் பண்ணி நடிக்கணும் என்று பேசினார்.

அப்போதும் எனக்கு சரியாக நடிப்பு வரவில்லை இருந்தாலும் படக்குழு கட்டாயப்படுத்தி நடிக்க வைத்து ஒரு வழியாக அந்த காட்சியை எடுத்து முடித்தனர். கடைசியில் அந்த படம் வெற்றி பெற்று எனக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததற்கு படகுழுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று திலோத்தமா சமீபத்திய பேட்டி ஒன்றில் காதல் மன்னன் அனுபவத்தை பேசி இருந்தார்.

Also Read : உன் சவகாசமே வேண்டாம், ஒதுங்கிய அஜித்.. பெரிய இடத்தை பகைச்சாலும் ஏகே தனிக்காட்டு ராஜா தான்

- Advertisement -

Trending News