ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பேட்டியில் உளறித்தள்ளிய தொகுப்பாளினி.. டைரக்டரால் அனுபவித்த சங்கடம்

பிரபல தொகுப்பாளினி ஒருவர் ஊடகத்திற்கு பேட்டி அளித்தபோது சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது ஒருமுறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது மேடையிலேயே சு**சு போயிட்டேன் எனக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

குழந்தை நட்சத்திரமாகவே தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனால் இவரது முகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பரிச்சயமாகி உள்ளது. அதன் பின்பு சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். ஆனால் தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார்.

ஜெயம், ரமணா போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கல்யாணி தான் அவர். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் போன்ற தொடர்களில் நடித்திருந்தார். இந்நிலையில் சிறுவயது முதலே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த கல்யாணி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் பணியாற்றி வந்தார்.

அதன்பின்பு பெங்களூரைச் சேர்ந்த மருத்துவரை திருமணம் செய்துகொண்ட கல்யாணியின் செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் கல்யாணியின் பேட்டிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது அவர் சிறுவயதில் கஷ்டப்பட்டது மற்றும் தனது அம்மாவின் தற்கொலை போன்ற விஷயங்களை வெளிப்படையாக கூறியிருந்தார்.

இந்நிலையில் கல்யாணி 7 இருந்து 8 வயது இருக்கும் போது முதல்முறையாக ஆங்கரிங் செய்ய மேடையேறி உள்ளார். அப்போது அவசரமாக சு**சு வந்ததால் டைரக்டரிடம் சைகை காட்டியுள்ளார். அவரும் 2 நிமிஷம், 2 நிமிஷம் என சொல்லி ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டதாம்.

இதனால் மேடையிலேயே சு**சு போய் விட்டேன் என கல்யாணி அந்த பேட்டியில் கூறியிருந்தார். அறியாத வயசில் தவறாக செய்ததுபோல் இந்த விஷயத்தை ஓபனாக கல்யாணி அந்த பேட்டியில் கூறியிருந்தார். மீண்டும் கல்யாணியை சின்னத்திரையில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

- Advertisement -

Trending News