புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கள்ள உறவுக்கு ஆசைப்பட்டு காதலனுக்கு செய்த துரோகம்.. 25 கோடி சொத்தை இழந்து நடுரோட்டிற்கு வந்த நடிகை

இரண்டு திருமணம் செய்து கொண்டாலும் அதன் பிறகு கல்யாணத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லாத உச்ச நடிகருடன் பிரபல நடிகை ஒருவர் 13 வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். சில காலமாக இவர்கள் இருவரும் தொடர்ந்து இணைந்த படங்களில் நடித்து வந்தவர்.

அதன் பின்பு அந்த உச்ச நடிகர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவரை விட்டு பிரிவதாகவும் அறிவித்தார். நடிகை தன்னுடைய மகளின் எதிர்காலத்தின் நன்மைக்காகத்தான் பிரிகிறேன் என்றும் விளக்கம் அளித்தார்.

அதன் பின்பு தனிமையில் இருந்த அந்த நடிகைக்கு அரசியல் பெரும் புள்ளியுடன் அறிமுகம் கிடைத்தது. கொஞ்ச நாட்களில் இவர்களுக்கிடையே நெருக்கம் அதிகரித்து கள்ளக்காதல் மலர்ந்தது. இந்தக் கள்ள உறவுக்கு ஆசைப்பட்டு தான் அந்த உச்ச நடிகருடன் இருந்த லிவிங் ரிலேஷன்ஷிப்பை நடிகை துண்டித்திருக்கிறார்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! உச்ச நடிகருக்கு செய்த துரோகம் தான் நடிகையின் 25 கோடி அம்பேலானது. நடிகை தன்னுடைய சொத்து சம்பந்தப்பட்ட ஆவணத்தை அந்தக் கள்ளக்காதலனிடம் கொடுத்துள்ளார்.

நடிகை சுமார் 25 கோடி மதிப்பிலான நிலத்தை வாங்கும் பொறுப்பை கள்ளக்காதலனிடம் கொடுத்தபோது, அவரது மனைவியின் பெயரையும் சேர்த்து எழுதி மோசடி செய்திருக்கிறார். நடிகையின் 25 கோடியை ஆட்டைய போட்டுட்டு கள்ளக்காதலன் தலைமறைமாகிவிட்டார். இப்போது அந்த நடிகை மகளுடன் மன உளைச்சலுக்கு ஆளாகி நடுரோட்டிற்கு வந்து விட்டார்.

- Advertisement -

Trending News