2 வருட லிவிங் ரிலேஷன்ஷிப்பை முடித்துக் கொண்ட நடிகை.. படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அராஜகம் செய்த நடிகர்

ரசிகைகளுக்கெல்லாம் இப்போதும் உலக அழகனாகவே தெரியும் டாப் நடிகர் ஒருவர், முன்னாள் உலக அழகியாக இந்திய சினிமாவில் ரவுண்டு அடித்துக் கொண்டிருந்த நடிகையுடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் 2 வருடங்களாக வாழ்ந்திருக்கிறார். ஆனால் அந்த நடிகரின் முரட்டு கோபமும் வீணாப்போன பொசசிவ்ன்ஸும் நடிகைக்கு நாளுக்கு நாள் டார்ச்சலாக மாறிவிட்டது.

பொறுத்து பொறுத்து பார்த்த நடிகை பெரிய இடத்திலிருந்து வரன் வரவும் முரட்டு ஹீரோவின் ரிலேஷன்ஷிப்பை கட் செய்துவிட்டார். ஆனால் அதை தாங்கிக் கொள்ள முடியாத நடிகர், அவருடைய வீட்டிற்கு சென்று கூச்சல் போட்டு இருக்கிறார். நடிகை வெளியே வந்து அவரை உள்ளே அழைக்கும் வரையிலும் கதவை தட்டிக் கொண்டே இருந்துள்ளார்.

Also Read: இப்போதும் பின்னால் சுத்தும் எக்ஸ் லவ்வர்.. வேண்டாம் என துரத்தி அடிக்கும் கவர்ச்சி நடிகை

இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பயந்தே அந்த நடிகை முரட்டு ஹீரோவை வீட்டிற்குள் அனுமதித்து விடுவார். இப்படியே சில காலம் கடந்த பிறகு, அந்த நடிகரின் சேட்டை தாங்க முடியாத அழகியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால் அதனால் எந்த பயனும் கிடைக்கவில்லை. ஏனென்றால் முரட்டு ஹீரோவுக்கு அவ்வளவு பெரிய செல்வாக்கு இருந்தது.

அதன் பிறகு அந்த நடிகை நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று அராஜகம் செய்துள்ளார். இதனால் அந்த படத்தின் வாய்ப்பு நடிகையிடமிருந்து வேறொரு முன்னணி நடிகைக்கு கை மாறியது. பிறகு அந்த நடிகைக்கு வேறொரு பிரபலத்துடன் உறவில் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

Also Read: அனுதாபத்தை வைத்து செய்த பிரமோஷன்.. ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணானதால் அப்செட்டில் இருக்கும் நடிகை

இப்படி பலவிதமான காதல் நச்சரிப்புகள் இருந்ததால் தேடி வந்த பெரிய இடத்து நடிகரின் வரனை ஏற்றுக்கொண்டு அந்த நடிகையை திருமணம் செய்து கொண்டார். முரட்டு வில்லனை விட பல மடங்கு செல்வாக்குடன் இருந்த பெரிய இடத்தில் தஞ்சம் அடைந்த பிறகு, அந்த நடிகைக்கு இப்போது வரை எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. நச்சுனு இருக்கும் அந்த நட்சத்திர தம்பதியர்கள் திரைதுறையே வியந்து பார்க்கும் அளவுக்கு நல்ல ஜோடிகளாக வலம் வருகின்றனர்.

ஆனால் அந்த முரட்டு ஹீரோ 50 வயதில் கடந்த நிலையிலும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் பல நடிகைகளுடன் டேட்டிங் செய்து கொண்டு பலவிதமான சர்ச்சைகளையும் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் முன்னாள் உலக அழகியை மட்டும் சொந்தமாக்கிக் கொள்ளாமல் விட்டு விட்டோமே என்ற கவலை இப்போதும் அவருக்கு இருக்கிறது.

Also Read: காலில் விழுந்து அட்ஜஸ்ட்மென்ட்க்கு அடிபணிய வைத்த நடிகர்.. ஓட்டு கேட்க போன இடத்தில் நடிகை செய்த காரியம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்