தற்போது எங்கு திரும்பினாலும் அந்த மாஸ் ஹீரோவின் லீலை பற்றிய செய்திகள் தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அடுத்தவரின் மனைவியுடன் தவறான உறவில் இருந்த அவரின் வண்டவாளம் இப்போது தண்டவாளத்தில் ஏறிய நிலையில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு மனிதர் நொந்து போய் இருக்கிறார்.
இதுவே அதிர்ச்சியை கிளப்பும் நிலையில் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கியது போட்டி நடிகர் தான் என்ற தகவலும் அதிர்ச்சியை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த பிரபலம் ஒருவர் வீட்டில் நடந்த சங்கதியும் இப்போது மீடியாவில் வைரலாக தொடங்கியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பின்னாலும் அந்த மகா பிரபு தான் இருக்கிறார். அதாவது இந்த பிரபலத்தின் மனைவி கணவரின் நண்பர் பட சூட்டிங்கை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது அதில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவரின் பார்வை இந்த குடும்பப் பெண் மீது விழுந்திருக்கிறது.
பார்த்ததுமே காதலில் விழுந்த அவர் கொஞ்சம் கொஞ்சமாக நடிகரின் மனைவியிடம் பேசத் தொடங்கி இருக்கிறார். இதற்கு அந்த மகா பிரபுவும் உடந்தையாக இருந்தாராம். அதை தொடர்ந்து அந்த ஜோடி இங்கு இருந்தால் நம்மை பிரித்து விடுவார்கள் எங்கேயாவது தலைமறைவாகி விடலாம் என்று பிளான் போட்டு இருக்கின்றனர்.
இதற்கும் அந்த மகா பிரபு சில பல உதவிகளை செய்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் எஸ்கேப் ஆக முடிவெடுத்து செயல்படும் நேரத்தில் வசமாக சிக்கி இருக்கின்றனர். நடிகருக்கு மனைவி செய்த துரோகம் தெரியவந்த நிலையில் இரு குடும்பத்தினரும் அவசர கட்ட ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.
அதை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பல அறிவுரைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அந்த தம்பதிகளுக்கு குழந்தைகளும் இருக்கின்றனர். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனைவியின் புத்தியை தெளிய வைத்து இந்த கள்ள காதலுக்கு நடிகர் ஒரு முடிவு கட்டி இருக்கிறார். தற்போது அவருடைய மனைவி அனைத்தையும் மறந்து விட்டு குடும்பத்தை கவனித்து வருகிறாராம்.