பலான விஷயத்துக்காக காதலியை தேடிச் சென்ற நடிகர்.. மொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு கல்தா கொடுத்த காதலி

மிகப்பெரிய இயக்குனரின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர்தான் அந்த நடிகர். அந்த திரைப்படத்தின் வெற்றியால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த அவருக்கு சில வருடங்களுக்குப் பிறகு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதன் பின்பு இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்பதையே திரையுலகம் மறந்துவிட்டது.

வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் அந்த நடிகர் தன் போக்கில் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு வெளிநாட்டு பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. சோசியல் மீடியாவில் நெருங்கி பழகிய அந்த நடிகர் சில மாதங்களுக்குப் பிறகு தன் காதலியை பார்ப்பதற்காக அவருடைய நாட்டுக்கு சென்று இருக்கிறார்.

Also read: இளசான நடிகைக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட 60 வயது நடிகர்.. ஆம்பள என நிரூபிக்கும் போது பிரிந்த உயிர்

உண்மையில் அவருக்கு அந்தப் பெண்ணுடன் காதல் எல்லாம் கிடையாது. பொழுதுபோக்காக ஆரம்பித்த இந்தப் பழக்கம் நேரில் சென்று பார்க்கும் வரை தொடர்ந்திருக்கிறது. அதிலும் அந்த நடிகர் அந்தரங்க தேவையை எதிர்பார்த்து தான் அங்கு சென்று இருக்கிறார். அதற்காக கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அவர் வெளிநாட்டிற்கு சென்று இருக்கிறார்.

அங்கு சென்று தன் காதலியை பார்த்த அந்த நடிகருக்கு அதிர்ச்சி தான் கிடைத்திருக்கிறது. ஏனென்றால் அவருடைய காதலி 24 மணி நேரமும் போதையில் தான் இருந்தாராம். அது மட்டுமல்லாமல் ஷாப்பிங் செல்வது போல் அழைத்துச் சென்று நடிகரிடம் இருந்த மொத்த பணத்தையும் காலி செய்து இருக்கிறார் அந்த காதலி.

சினிமாவில் சரியான வாய்ப்பு இல்லாமல் வருமானத்திற்கு சிரமப்பட்டு வந்த அந்த நடிகர் அங்கே இங்கே என்று கடனை வாங்கி தான் தன் காதலியை பார்க்க சென்றிருக்கிறார். அப்படி கடன் வாங்கிய அந்த பணம் அனைத்தும் கரைந்து போனதால் சுதாரித்துக் கொண்ட அந்த நடிகர் நான்கு நாட்களிலேயே காதலிக்கு ஒரு பெரிய கும்பிடாக போட்டு இந்தியா வந்திருக்கிறார். தற்போது அந்த நடிகர் வேறு ஒரு பொண்ணை டேட்டிங் செய்து வருகிறாராம்.

Also read: 12 வயதில் கதாநாயகி, 17 வயதில் நான்காவது மனைவி.. நம்பிக்கை துரோகத்தால் திசைமாறிய வாழ்க்கை!

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -