திமிரை விட்டுக் கொடுக்காமல் உச்சாணி கொம்பிலே நின்ற நடிகர்.. இறங்கி வந்த எம்ஜிஆர், சிவாஜி

எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவருமே தமிழ் சினிமாவில் இரண்டு ஜாம்பவான்களாக வலம் வந்தனர். இவர்கள் இருவருமே கடைசி வரை தங்களது கேரக்டரில் நின்று பெயரை காப்பாற்றிக் கொண்டனர். புரட்சிக் கலைஞர் எம்ஜிஆர் நடிகர்களுக்கு வாழ்வு தந்துள்ளார்.

மேலும் அவர் காலத்தில் மற்ற நடிகர், நடிகைகளுக்கு பல உதவிகள் செய்து அவர்களை தூக்கி விட்டுள்ளார். எம்ஜிஆர் போலவே பல சாதனைகள் படைத்த மற்றொருவர் சிவாஜி கணேசன். இவரும் நலிந்த நடிகர்களுக்கு பல உதவிகளை செய்து அவர்கள் வளர வேண்டும் என காப்பாற்றி உள்ளார்.

Also Read :சிவாஜி தான் வேண்டும் என அடம் பிடித்த நடிகர்கள்.. தன் பாணியிலேயே நடிகர் திலகம் அசத்திய 5 படங்கள்

இவ்வாறு சிவாஜி, எம்ஜிஆர் என இரண்டு மாபெரும் நடிகர்கள் செய்த உதவி இன்று வரை பேசப்படுகிறது. இந்நிலையில் 1958 ஆம் ஆண்டு டி ஆர் பந்தலு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சபாஷ் மீனா. இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் சந்திரபாபு நடித்தால் நன்றாக இருக்கும் என சிவாஜி அவரை ரெகமெண்ட் செய்துள்ளார். அப்போது தயாரிப்பாளர்கள் சந்திரபாபு உடன் பேசும் போது இந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம்.

Also Read :சிவாஜி, எம்ஜிஆர் வாங்கிய அதிகபட்ச சம்பளம்.. படையப்பாகாக ரஜினி கொடுக்க சொன்ன சம்பளம்

மேலும் சிவாஜி நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார் என்று சொன்னபோதும் தயாரிப்பாளர்களிடம் திமிராய் பேசினாராம். அதன் பிறகு சிவாஜிக்கு கொடுக்கும் சம்பளத்தை விட ஒரு ரூபாய் எனக்கு அதிகமாக கொடுக்க வேண்டும் என சந்திரபாபு கேட்டிருந்தாராம்.

இந்த செய்தி சிவாஜியின் காதுக்கு சென்ற பிறகு அவர் கேட்டது போல ஒரு ரூபாய் அதிகமாகவே கொடுத்து விடுங்கள் என்று கூறி மெய்சிலிர்க்க வைத்து விட்டாராம். அதேபோல் எம்ஜிஆரையும் அடிக்கடி சந்திரபாபு கிண்டல் செய்யக்கூடியவராம். ஆனால் எம்ஜிஆர், சிவாஜி பெயர் தான் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கிறது.

Also Read :வெறும் 15 நாட்களில் உருவான சிவாஜியின் படம்.. மொத்த தியேட்டரையும் அதிரவைத்த எம் ஆர் ராதா