உதயநிதி தான் எனக்கு என்றுமே முதலாளி.. அடுத்த படத்திற்கு அடி போடும் நக்கல் நடிகர்

உதயநிதி ஸ்டாலின் தற்போது சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படம் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றிருந்தது. தற்போது நடிப்பைத் தாண்டி தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தராகவும் உதயநிதி பட்டையைக் கிளப்பி வருகிறார்.

இந்நிலையில் உதயநிதி ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த போது மக்கள் அங்கீகாரம் கொடுக்க காரணம் அவர் படத்தில் இடம்பெற்ற காமெடி தான். அந்தப் படங்களில் உதயநிதியை விட்ட சந்தானத்தின் காமெடி காட்சிகள்தான் அதிகமாக இடம் பெற்றிருந்தது. அதன் பின்பு படிப்படியாக உயர்ந்து ஹீரோ அந்தஸ்தை உதயநிதி பெற்றார்.

தற்போது உதயநிதி தான் எனக்கு எப்போதுமே முதலாளி என சந்தானம் கூறியுள்ளார். அதாவது சந்தானம் இப்போது மேயாதமான் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் குலுகுலு என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூலை 29ஆம் தேதி வெளியாகயுள்ளது. குலுகுலு படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சந்தானம் எனக்கு என்றுமே முதலாளி உதயநிதி தான், அவர் சினிமாவில் வசனம் பேசுவதற்காக வரவில்லை, மக்களிடம் நேரடியாக பேச வந்துள்ளார் என உதயநிதியை பற்றி சந்தானம் புகழ்ந்து பேசி இருந்தார். தற்போது அரசியல்வாதியாக மக்களிடம் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார் உதயநிதி.

மேலும் கூடிய விரைவில் முழுநேர அரசியல்வாதியாக இருக்கப் போகிறார் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின் அரசியல் மட்டுமின்றி திரைத்துறையில் வெளியாகும் படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதால் சந்தானம் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்களை உதயநிதி வாங்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு சந்தானம் புகழ்ந்து பேசுவதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

சந்தானத்துடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா என உதயநிதியிடம் கேட்கும்போது, சந்தானம் மிகவும் பிஸியான நடிகர் அவரிடம் கால்ஷூட் கேட்டு சொல்லுங்கள் என சிரித்தபடி சென்றுள்ளார் உதயநிதி. ஆனால் மீண்டும் உதயநிதி, சந்தானம் காம்போவில் ஒரு படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

Next Story

- Advertisement -