எம்ஜிஆரை கிண்டல் அடிப்பதே வழக்கமாய் வைத்த நடிகர்.. எடுத்த 4 படங்களிலும் சந்தித்த தோல்வி

Actor Mgr: சினிமாவிற்குள் நுழைந்து விட்டால் முக்கால்வாசி நடிகர் நடிகைகள் அனைவரும் மக்களிடம் ஈசியாக ஃபேமஸ் ஆகிவிடுவார்கள். அப்படி பேமஸ் ஆனவர்கள் அனைவரும் காலம் கடந்தும் அவர்களை பற்றி நின்னு பேசுமானால் அதுதான் சரித்திரம். அப்படி சரித்திரத்தை உருவாக்கியவர் தான் நடிகரும், சிறந்த அரசியல் தலைவருமாக இருந்த எம்ஜிஆர்.

அப்படிப்பட்ட எம்ஜிஆரிடம் மிக நெருக்கமாக இருந்த எத்தனையோ நண்பர்களில் ஒருவர் தான் நடிகர் மற்றும் இயக்குனர் சோ. இவர் எம்ஜிஆருக்கு அரசியல் ரீதியாகவும், சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் நிறைய கருத்துக்களை கூறியிருக்கிறார். அத்துடன் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால் எம்ஜிஆரை அடிக்கடி கிண்டல் அடிப்பதே வழக்கமாக வைத்திருந்தார்.

Also read: எம்ஜிஆரை எதிர்த்து நின்ற ஒரே நடிகை.. உங்க இஷ்டத்துக்கு நடிக்க முடியாது, சம்பளத்தை திருப்பிக் கொடுத்த அவலம்

அப்படிப்பட்ட இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால் இவர் எடுத்த நான்கு படங்களுமே மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்று தற்போது பார்க்கலாம். 1972 ஆம் ஆண்டு மிஸ்டர் சம்பத் என்ற திரைப்படம் சோ இயக்கத்தில் முத்துராமன் மற்றும் சுந்தரராஜன் நடிப்பில் வெளியானது. இப்படம் முழுக்க முழுக்க நையாண்டி நகைச்சுவை படமாக வெளிவந்தது. ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

அடுத்ததாக 1973 ஆம் ஆண்டு சோ இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் முகமது பின் துக்ளக். இப்படம் அந்த காலத்தில் இருந்த பிரேம் மினிஸ்டர் மற்றும் அரசியல்வாதிகளை மறைமுகமாக தாக்கி எடுக்கப்பட்டு அவர்களை தோலுரித்து காட்டும் படமாக வெளிவந்தது. ஆனால் இந்த படம் பெருசாக மக்களிடம் ரீச் ஆகவில்லை.

Also read: இதுவரை மூன்று தலைமுறையாக வெளிவந்த மொத்த படங்கள்.. எம்ஜிஆரை மிஞ்சி பேசப்பட்ட இரண்டு ஜாம்பவான்கள்

இதனை அடுத்து 1975 ஆம் ஆண்டு சோ இயக்கத்தில் ஜெயலலிதா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில் யாருக்கும் வெட்கமில்லை என்ற திரைப்படம் வெளிவந்தது. இப்படம் சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும். இவர் கருத்துக்களை தைரியமாக முன்வைத்து அதற்கேற்ற படங்களை எடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் அப்படி எடுத்த படங்கள் எதுவுமே கை கொடுக்காமல் போய்விட்டது.

அடுத்தபடியாக 1976 ஆம் ஆண்டு இயக்கிய படம் தான் உண்மையே உன் விலை என்ன. இப்படத்தில் முத்துராமன், அசோகன், பத்மப்ரியா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தின் கதையானது கொலை குற்றவாளியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் இளைஞனை காப்பாற்றும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து சோ-க்கு இயக்குனர் செட் ஆகவில்லை என்று சொல்வதற்கு ஏற்ப நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. இது இவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமாக கருதி அடுத்த படத்தை இயக்குவதை கை விட்டார்.

Also read: எம்ஜிஆரை பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை.. சூட்டிங் ஸ்பாட்டிலே தெனாவட்டு காட்டும் ஹீரோயின்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்