வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பொண்டாட்டியை ஐட்டம் டான்ஸ் ஆட வைத்து அழகு பார்த்த நடிகர்.. குழந்தை பெற்ற பின் இதெல்லாம் தேவையா

ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, கார்த்தி, சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் வெகு சீக்கிரமே ஜோடி போட்ட நடிகை ஒருவர், குழந்தை பெற்ற பின் மறுபடியும் தமிழ் சினிமாவில் குத்தாட்டம் போட்டு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அந்தப் பாடலுக்கு இவரை ஆட விட்டு வேடிக்கை பார்த்ததே, அந்த நடிகையின் காதல் கணவர் என்பதுதான் வியப்பை ஏற்படுத்துகிறது.

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாயிஷா முதல் படத்திலேயே தன்னுடைய வசீகர அழகாலும், நடன அசைவுகளாலும் ரசிகர்களை மயக்கினார். அதன் பிறகு அசுர வேகத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். சாயிஷா, கஜினிகாந்த் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ஆர்யாவின் மீது காதல் வயப்பட்டு பெற்றோரிடம் போராட்டம் செய்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read: பத்து தலையில் பிரியா பவானி ஷங்கர் சம்பளம்.. ஒரு பாட்டு ஆடி பாதி சம்பளம் வாங்கிய சாயிஷா

திருமணத்திற்கு பின்னர் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்த இவர், திருமணம் ஆன இரண்டு வருடத்தில் அழகான பெண் குழந்தைக்கு தாயானார். இதன் பின் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்த சாயிஷா, உடல் எடையை குறைத்து முன்பை விட கவர்ச்சி தூக்கலாக மாறினார். இதனால் சினிமாவில் சாயிஷா மறுபடியும் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறார் என ரசிகர்கள் யூகித்த நிலையில்,  திடீரென்று சிம்புவின் பத்து தல படத்தில் ராவடி பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு கதி கலங்க வைத்திருக்கிறார்.

இந்தப் பாடலின் முழு வீடியோவும் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவை ரணகளம் செய்து கொண்டிருக்கிறது. இதில் சாயிஷா குட்டையான ஸ்கெட்ச, ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து ராவடி என்ற ஐட்டம் பாடலுக்கு குலுங்க குலுங்க வெறித்தனமாக ஆட்டம் போட்டு இளசுகளை திணறடித்துள்ளார். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் சாயிஷாவுக்கு 40 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர் கதாநாயகியாக நடித்த போதே 30 முதல் 40 லட்சம் தான் சம்பளமாக பெற்றார்.

Also Read: பத்து தல படத்தில் குத்தாட்டம் போட்ட சாயிஷாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?. ஆடவிட்டு வேடிக்கை பார்த்த ஆர்யா

அப்படி இருக்கும்போது இந்த ஒரு பாடலுக்கு இவ்வளவு சம்பளம் என்பது ஓகே தான் என ஆர்யாவும் சாயிஷாவை இந்த பாடலுக்கு ஆடவிட்டு வேடிக்கை பார்த்து இருக்கிறார். சமீபத்தில் பத்து தல படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் சாயிஷா தன்னுடைய கணவர் ஆர்யாவை பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளி இருக்கிறார். ஏனென்றால் சோஷியல் மீடியாவில் பொண்டாட்டியை குலுங்க குலுங்க ஆடவிட்டு அழகு பார்த்திருக்கும் ஆர்யா என்று நெட்டிசன்கள் விலாசுகின்றனர். குழந்தை பெற்ற பின் இதெல்லாம் தேவையா சாயிஷா! என்றும் கேட்கின்றனர்.

இருப்பினும் சாயிஷா குத்தாட்டம் போட்டு ரீ என்ட்ரி கொடுப்பதற்கு முக்கிய காரணம் தன்னுடைய கணவர்தான். அவருடைய ஒத்துழைப்பு மட்டும் இல்லாவிட்டால் இந்த பாடலில் நடனம் ஆடி இருக்க வாய்ப்பில்லை என்று ஆர்யா குறித்து சாயிஷா புகழ்ந்து பேசி இருக்கிறார். ஆனால் ஆர்யாவிற்கு ஏற்கனவே பட வாய்ப்புகள் எதுவும் சரிவர வராததால் மனைவியை வைத்தாவது தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்க வேண்டும் என்று சாயிஷாவை இப்படி ஆடவிட்டு பார்த்திருக்கிறார்.

Also Read: அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட 5 ஜோடிகள்.. 17 வயது வித்தியாசத்தில் ஜோடி சேர்ந்த ஆர்யா சாயிஷா

- Advertisement -

Trending News