Tamil Actor: தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருக்கும் அஜித் நடிப்பதை தாண்டி பைக், கார் ரேசிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் நடிக்கும் படங்களில் பைக் சீன் வந்தால் செம ஸ்பீடா ஓட்டி பார்த்தவரை மிரள விடுவார். அந்தக் காட்சியை அல்வா சாப்பிடுவது போல் அசால்ட்டாக நடித்து முடிப்பார். இது போன்ற சாகசம் நிறைந்த காட்சிகளில் அஜித் நடிக்கும் போது அடிபட்டு ஏகப்பட்ட ஆபரேஷன்களை செய்ய வேண்டியதானது.
ஆனா இவருக்கு செஞ்ச ஆப்பரேஷனை எல்லாம் ஓவர் டேக் செய்யும் அளவுக்கு இன்னொரு நடிகரும் கோலிவுட்டில் இருக்கிறார். அல்டிமேட் ஸ்டார் அஜித் போலவே சினிமாவில் இருக்கும் இன்னொரு டாப் ஹீரோவான விக்ரமும் பைக்கை ஸ்பீடா ஓட்டுவார். ஒரு முறை பைக் ஓட்டிக் கொண்டிருக்கும்போது ஆக்சிடென்ட் ஆகி அவருடைய வலது கால் 90% பாதிப்படைந்தது.
நிச்சயம் கால்-ஐ எடுத்து விடனும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். ஆனா விக்ரம், ‘சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும், அதற்கு என்னுடைய கால் எனக்கு ரொம்ப முக்கியம்’ என்று டாக்டரிடம் கெஞ்சினார். பின்பு மிகவும் கஷ்டமாக இருக்கும் வலி மிகுந்த ஆபரேஷனை செய்து தன்னுடைய கால்-ஐ காப்பாற்றினார்.
இதற்காக விக்ரம் நான்கு வருடத்திற்குள் 23 ஆப்ரேஷனை செய்து கொண்டார். இந்த 4 வருடமும் அவர் படுத்த படுக்கையாக இருந்தார். அந்த சமயத்தில் அவருடைய குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது. அந்த நான்கு வருடத்தையும் கடந்த பின்பு, விக்ரம் நடக்க கூடிய அளவுக்கு உடல்நலம் தேறியதும் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் மறுபடியும் நடிக்க ஆரம்பித்தார்.
இருப்பினும் அவரால் பழைய மாதிரி வேகமாக நடக்கவும் ஓடவும் முடியல. அவரோட ரன்னிங்கை பார்த்தாலே ஒரு மாதிரி மாற்றுத்திறனாளி ஓடுவது போல் இருக்கும். இதனை பீமா, பிதாமகன், சாமி போன்ற படங்களில் கண்கூடாக பார்க்க முடியும். இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாத விக்ரம் சினிமாவில் நடிப்பு அரக்கன் போல் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் இப்போது வரை வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கிறார்.
அதிலும் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய கால் இருக்கும் நிலையில், இந்த படத்தில் எந்தவித காம்ப்ரமைசும் இல்லாமல் வித்தியாசமான கெட்டப்பில் பல சாகசங்களை செய்கிறார்.