அசுரன் பட சிவசாமியாக நடிக்க துடிக்கும் நரசிம்மா.. ஓயாத மாமனார் மருமகன் போட்டி

dhanush-asuran
dhanush-asuran

The actor is eager to play Dhanush’s character in Asuran: சமீப காலமாகவே அக்கட தேசத்தில் டாப் ஹீரோக்கள் எல்லாம் இப்போது தமிழ் சினிமாவிற்கு படையெடுக்க துவங்கி விட்டனர். அதிலும் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து நடித்து ஹிட் கொடுத்த நடிகர், இப்போது அவருடைய மருமகன் தனுசுடனும் இணைந்து நடித்து மாஸ் காட்டுகிறார்.

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் குறிப்பாக சிவராஜ்குமார் நரசிம்மா என்ற கேரக்டரில் வாயில் சுருட்ட போட்டு பிடிப்பது போல் ரஜினிக்கு நிகராக மாஸ் காட்டினார்.

இப்போது சிவராஜ் குமார் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய சமீபத்திய பதிவில், ‘ஜெயிலர் படத்திற்கு தமிழ் மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ச்சியாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் என்னிடம் வந்து கேப்டன் மில்லர் படத்தின் கதைய சொன்னாங்க.

Also Read: கேப்டன் மில்லரை முந்திய அயலான்.. TN தியேட்டர் உரிமம் மட்டும் இத்தனை கோடியா.!

தனுஷ் கேரக்டரில் நடிக்க துடிக்கும் சிவராஜ்குமார்

ஆனா படத்தின் கதைய பத்தி எனக்கு கவலை இல்லை. தனுஷ் படத்தில் நான் நடிப்பேன். உண்மையில் தனுஷ் சிவசாமியாக நடிச்ச அசுரன் படத்தை ரீமேக் செய்ய விரும்பினேன். இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகின் தலைசிறந்த நடிகர் தனுஷ் என்று சிவராஜ்குமார் கூறினார்.

ரஜினியுடன் நடிச்சிட்டு இப்ப தனுஷை தூக்கி வைச்சு பேசுவது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை எரிச்சலடையை வைக்கிறது. ரஜினியும் இப்போதெல்லாம் மருமகன் என்று கூட பார்க்காமல் தனுஷ் உடன் தான் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். எப்படி பார்த்தாலும் ரஜினி இன்னும் ஒரு சில படத்துல நடிச்சிட்டு ரிட்டயர்டு ஆயிடுவார். ஆனால் தற்சமயம் டாப் ஹீரோவாக இருக்கும் தனுஷுக்கு இப்படி எல்லாம் ஐஸ் வச்சா தான் அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகவே சிவராஜ்குமார் இப்படி எல்லாம் புகழ்ந்து பேசி இருக்கார்.

Also Read: எம்ஜிஆர் ஐ பகைத்த 4 நடிகர்கள்.. சூப்பர் ஸ்டாரின் சர்ச்சையான போஸ்டரை கிழித்து தொங்க விட்ட விசுவாசிகள்

Advertisement Amazon Prime Banner