ஜனநாதனுக்காக விஸ்வாசத்தை வெளிப்படுத்திய விஜய் சேதுபதி.. ஆச்சரியத்தில் உறைந்து போன கோலிவுட்

கோலிவுட்டில் மிகவும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் எஸ்பி ஜனநாதன். இவர் தமிழ் சினிமாவில் ‘இயற்கை’ எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை படம் வசூல் ரீதியாக சாதனை புரியாவிட்டாலும் அந்தப் படத்தின் இயக்குனரான ஜனநாதனுக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. அதேபோல் ஜனநாதன் முதன் முதலில் தயாரித்த படம் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்பது கூடுதல் தகவல்.

மேலும் 61 வயதான ஜனநாதன் மார்ச் 14-ஆம் தேதி இதய நோய் பிரச்சனை காரணமாக காலமானார். இந்நிகழ்வு திரைத்துறையினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இப்படி இருக்க எஸ்பி ஜனநாதனுக்காக விஜய்சேதுபதி செய்திருக்கும் செயல் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அதாவது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும், நல்ல மனிதராகவும்  இருப்பவர்தான் விஜய்சேதுபதி. இவர் தன்னுடன் பணியாற்றுபவர்களையும், ரசிகர்களையும் தனது அன்பால் மெய்சிலிர்க்க வைப்பது வழக்கம். இவர் தற்போது மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகிக்  கொண்டிருந்த லாபம் படத்தில் நடித்து வந்தார்.

மேலும் லாபம் படத்தின் எடிட்டிங் வேலையின் போது தான் ஜனநாதன் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும், மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் அவர் மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளனர்.

இதைக் கேட்ட விஜய் சேதுபதி ஜனநாதனுக்கு உயர்தர சிகிச்சைகள் அனைத்தையும் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டாராம். இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஜனநாதன் உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஜனநாதன் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையின் ஒட்டுமொத்த மருத்துவ செலவையும் தானே செலுத்துவதாக விஜய்சேதுபதியின் தெரிவித்துள்ளாராம். நேற்று நடைபெற்ற ஜனநாதனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி கண்ணீர் விட்டு அழுதபடி அவரது இறுதி ஊர்வலத்தில் நடந்தே வந்ததோடு, பூத்தூவி சென்றாராம்.

அதேபோல் ஜனநாதன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்சேதுபதி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தேற்றினாராம்.  எனவே மறைந்த இயக்குனருக்காக விஜய் சேதுபதி செய்திருக்கும் இந்த செயல்கள் அவரது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Next Story

- Advertisement -