42 வயது ஆன்ட்டியால் போண்டியான நடிகர்.. வெளிச்சத்திற்கு வந்த அந்தரங்க நெருக்கம், பறிபோன வாய்ப்பு

பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி அந்தஸ்தை பிடித்த நடிகர் ஒருவர் இப்போது எங்கு இருக்கிறார் என்ற அடையாளமே தெரியாமல் போயிருக்கிறார். ஒரு காலத்தில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து ரொம்பவும் பிசியான நடிகராக வலம் வந்தவர் தான் இவர். ஹீரோ கேரக்டர் மட்டுமில்லாமல் வில்லன், குணச்சித்திரம் இப்படி எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதில் அவர் தன்னை நிரூபித்து விடுவார்.

இதனாலேயே அவருக்கு வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது. அது மட்டுமல்லாமல் அவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்தது. ஆனாலும் அந்த நடிகர் இப்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவருக்கு சகலமுமாக இருந்த 42 வயது ஆன்ட்டி தான். இது பலருக்கும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும்.

ஏனென்றால் திரையுலகை பொருத்தவரை நடிகருக்கு நல்ல பெயர் எப்போதுமே உண்டு. அதிலும் பெண்கள் விஷயத்தில் இவர் மிகவும் நல்லவர். அப்படி இருக்கும்போது பெண் ஒருவரால் இவருடைய சினிமா வாழ்வே அஸ்தமனமானது தான் வேதனை. அதாவது நடிகர் பிஸியாக இருந்த காலகட்டத்தில் அவருக்கு மேனேஜராக இருந்தவர் தான் அந்த 42 வயது பெண்மணி.

Also read: அந்தரங்க ஆசை காட்டி சொத்துக்களை அபகரித்த நடிகை.. பின் டாட்டா காட்டி இயக்குனருடன் திருமணம்

அவர்தான் நடிகரின் கால்ஷூட், சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால் நடிகரை சந்திக்க வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அனைவரும் இவரை தான் சந்திக்க வேண்டுமாம். இவர்தான் நடிகர் எந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்வாராம். அந்த அளவுக்கு அவர்களுக்குள் ரொம்ப நெருக்கம் இருந்திருக்கிறது.

இதனாலேயே அவருக்கான வாய்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. நடிகரும் சதா நேரமும் அந்த பெண்மணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததால் தன்னுடைய இடம் பறிபோனதை கூட அவரால் கவனிக்க முடியவில்லை. இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அவரை திரையுலகம் ஒதுக்க ஆரம்பித்தது. ஆனாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறாராம்.

Also read: சூர்யா பட நடிகையை எல்லை மீறி தடவிய நபர்.. கோபத்தில் கொந்தளித்த சிம்பு பட நடிகை

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -