அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்.. விஜய்யை குத்திக் காட்டிய எஸ் ஏ சந்திரசேகர்

உலக அளவில் புகழுடன் இருக்கும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் திரையுலகில் கூட அவரை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இன்றைய வளர்ந்து வரும் நடிகர்கள் கூட அவரை தான் பின்பற்றி வருகின்றனர். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடைவதற்கு பல போட்டிகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடைபெற்று வருகிறது. அதிலும் சமீப காலமாக விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சுகள் பரவ ஆரம்பித்துள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் ரஜினி குறித்து ஒரு விஷயத்தை பெருமையுடன் கூறி இருக்கிறார்.

Also read: சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் ஓகே.. விஜயகாந்தை அசிங்கப்படுத்திய ஹீரோயின்

அதாவது ரஜினி என்னதான் புகழின் உச்சியில் இருந்தாலும் அந்த தலைக்கனம் அவருக்கு கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையும் கூறியுள்ளார். அதாவது ரஜினி பகல் முழுவதும் புகழ் வெளிச்சத்தில் இருந்தாலும் இரவில் தான் கடந்து வந்த பாதையை பற்றி தினமும் நினைத்துக் கொள்வாராம்.

அது மட்டுமல்லாமல் தான் ஒரு கண்டக்டர் என்ற மனநிலையுடன் தான் மறுநாள் காலையில் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வாராம். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் இருப்பதாக எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய அந்த பழக்கத்தை நான் தினமும் கடைபிடிக்கவில்லை என்றாலும் அவ்வப்போது என்னுடைய பழைய வாழ்க்கையை நினைத்துக் கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார்.

Also read: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. வாரிசு படத்தை வைத்து பிளான் போட்ட சன் டிவி

இதன் மூலம் அவர் மறைமுகமாக விஜய்யையும் குத்தி காட்டி பேசி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் கடந்த சில வருடங்களாகவே அவருக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கூட விஜய் தன் அப்பா அம்மாவை கண்டு கொள்ளவில்லை என்ற ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சந்திரசேகர் ரஜினி எதனால் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று வெளிப்படையாக கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய்யின் சம்மதத்தின் பேரில்தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவருக்கு மாற்றும் முயற்சி நடந்து கொண்டிருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு காட்டி வரும் நிலையில் எஸ் ஏ சந்திரசேகரும் ரஜினி தான் ஒரே சூப்பர் ஸ்டார் என்று சொல்லாமல் சொல்லி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: மணிரத்னத்திற்காக விட்டுக் கொடுத்த ரஜினி.. பரபரப்பை கிளப்பிய ஜெயிலர் அப்டேட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்