புளுகுரதுல இது வேற ரகம்.. அதுவும் அவங்க ஆவியுடன் பேசி நினைத்ததை சாதித்த எஸ் வி சேகர்

தற்போதுள்ள நவீன உலகில் கூட பேய், பிசாசு, ஆவி என நம்புவதற்கு ஒரு கூட்டமே உள்ளது. அதிலும் சிலரோ தான் ஆவியுடன் பேசினேன், பேயை பார்த்தேன், எனக்குள் பேய் உள்ளது என அனைவரது கவனத்தை தன் மீது திருப்ப சில கட்டுக்கதைகள் கட்டுவார்கள். அவர்கள் சொல்வது பொய்யா, உண்மையா என்பதை அறிந்துக்கொள்ளவே ஒரு கூட்டம் உள்ளது.

ஏன் சினிமாவில் கூட பேய் படங்களை எடுத்தால் மக்கள் ஆர்வத்துடன் இன்று வரை பார்க்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் ஆவியுடன் பேசியதாக கூறியுள்ளது பலருக்கும் வேடிக்கையாக உள்ளது. 80 களில் தன் நகைச்சுவையான நடிப்பின் மூலமாக பல படங்களில் நடித்தவர் தான் நடிகர் எஸ்.வி.சேகர்.

Also Read: ஜோசப் விஜய் யாருன்னு பதிலடி கொடுத்த எஸ்வி சேகர்.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு!

இவர் தற்போது அரசியல் கட்சியில் இணைந்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவார். அந்த வகையில், தற்போது பெரிய சர்ச்சைக்குரிய விஷயத்தை பகிர்ந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தார். இவரது மறைவு இன்று வரை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை எனலாம். அந்த வகையில் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து விசாரணை ஒருபக்கம் நடந்து தான் வருகிறது.

இதனிடையே எஸ்.வி சேகர் ஜெயலலிதாவின் ஆவியுடன் தான் பேசியதாகவும், அவர் தன்னிடம் வந்து தனக்கு நடந்த பிரச்சனைகளுக்கு, நான் பொறுப்பில்லை என ஜெயலலிதாவின் ஆவி கூறியதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் எஸ்.வி சேகர் கூறிய கருத்து பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அப்போது எஸ்.வி சேகர் ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டார்.

Also Read:  தினந்தோறும் ஜெயலலிதாவை பார்க்க ஆசைப்பட்ட நடிகர்.. அம்மாவின் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்தவர்

இதனிடையே ஜெயலலிதா இறந்த 8 மாதங்கள் கழித்து, அவரது ஆவி இதுகுறித்து தன்னிடம் பேசிவிட்டு சென்றது என எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார். இவரது பேச்சுக்கு அதிர்ச்சியான தொகுப்பாளர் எப்படி ஆவியுடன் நீங்கள் பேசுனீர்கள் என கேட்க, அதற்கும் ரெடியாக ஒரு பதிலை கூறியுள்ளார். அதில், ஒரு மனிதர் இறந்துவிட்டால், அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணரவே 6 மாதங்கள் ஆகுமாம்.

அந்த ஆறு மாதத்தில் அவர்கள் உடலுக்குள் அந்த ஆத்ம செல்ல முயற்சிக்குமாம். அப்படி முடியாமல் போக எட்டு மாதங்கள் கழித்து, அந்த ஆவி பேச நினைக்கும் நபர்களின் கண்களுக்கு தெரியுமாம். அப்படித்தான் ஜெயலலிதாவின் ஆவி , மறைந்த நடிகர் மற்றும் எழுத்தாளரான சோ அவர்களின் ஆவியுடனும் பேசியதாக எஸ். வி சேகர் கூறியுள்ளார். இவரது பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகிய நிலையில் புழுகுறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா என நெட்டிசன்கள் எஸ்.வி சேகரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Also Read: ஜினியின் அந்த படத்துக்கு ‘A’ சர்டிபிகேட் கொடுத்திருக்கணும்.. தனிமனித ஒழுக்கம் இல்ல, காண்டான எஸ்வி சேகர்!

 

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்