நான் இப்ப நல்லா இருக்க காரணமே அந்த மனுஷன் தான்.. லாரன்ஸை தூக்கி விட்டு அழகு பார்த்த நடிகர்

டான்ஸ் மாஸ்டராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தற்போது உச்சம் பெற்றிருக்கும் ராகவா லாரன்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் ஒருவர்தான் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார்.

ரஜினி ஷூட்டிங்கில் இருந்தபோது அவருக்கு சாப்பாடு பரிமாறுவது போன்ற சின்ன சின்ன வேலைகளை ராகவா லாரன்ஸ் மிகுந்த ஈடுபாடுடன் செய்து இருக்கிறார். அப்போது அவர் டான்ஸ் நல்லா ஆடுவதை தெரிந்துகொள்ள ரஜினி அவரை ஆட சொல்லி பார்த்திருக்கிறார். அதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் நல்லா இருக்கிறது என்ற ஒத்த வார்த்தையை மட்டுமே சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம்.

Also Read: அரசியலுக்கு வந்தால் தான் உதவி செய்யணும் இல்லை.. நடிகராக கூட இருந்து உதவலாம் என்று நிரூபித்த லாரன்ஸ்

ஆனால் ரஜினி தன்னிடம் வந்து கை கொடுப்பார், கட்டிப்பிடிப்பார் என்ற ஆசையில் இருந்திருக்கிறார். ஏனென்றால் ராகவா லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர். அந்த சமயத்தில் ரஜினியைப் போல் டாப் நடிகராக இருந்த சரத்குமாரின் முன்பு ஆடிய போது கை கொடுத்தது மட்டுமின்றி, 100 ரூபாயை கொடுத்தும் ஊக்குவித்தாராம். அது கூட ரஜினி பண்ண வில்லையே என்ற ஏக்கம் லாரன்ஸ்க்கு இருந்ததாம். அதன் பின் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் 2 நாட்கள் தொடர்ந்து ரஜினி லாரன்ஸை உன்னிப்பாக கவனித்திருக்கிறார்.

ஆனால் லாரன்ஸ் பார்க்கும்போது ரஜினி அவற்றை மறைத்து சிகரெட் பிடிப்பது போல் ஆக்சன் செய்துள்ளார். கடைசி நாள் ஷூட்டிங் நடந்தபோது லாரன்ஸை அழைத்த ரஜினி தன்னுடைய வீட்டிற்கு வந்து சந்திக்கும்படி சொன்னாராம். அந்த நிமிடம் லாரன்ஸ் உறைந்த நிலையில் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைப்பில் இருந்திருக்கிறார்.

Also Read: லாரன்ஸ் பிள்ளைகளுக்கு விஜய் செய்யும் உதவி.. விரைவில் இணைய உள்ள கூட்டணி

பிறகு மறுபடியும் ரஜினி, ‘நாளைக்கு என்னுடைய வீட்டிற்கு வந்து விடுகிறீர்களா!’ என்று கேட்டார். அதற்கு வந்து விடுகிறேன் சார் என்று சொன்னாராம். ரஜினியின் வீட்டிற்கு சென்ற பிறகு அவர் ஒரு கடிதத்தை எழுதி இதை எடுத்துக்கொண்டு சென்று டான்சர்ஸ் யூனியன் இடம் கொடுங்கள். உங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று சொன்னாராம்.

அதன் பிறகு பிரபுதேவா மாஸ்டரிடமும் ரஜினி பேசி லாரன்ஸை அவருடைய உதவியாளராக வைத்துக் கொள்ளும்படி பரிந்துரைத்திருக்கிறார். பிறகு பிரபுதேவா வீட்டில் இருந்தும் அழைப்பு வந்திருக்கிறது. அதன் பிறகு தான் பிரபுதேவாவுடன் லாரன்ஸ் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு ரஜினி மூலம் கிடைத்தது.

Also Read: 1500 தியேட்டர்களில் வெளியான ருத்ரன்.. கல்லா கட்டியதா.? முதல் நாள் வசூல் இதுதான்

இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய திறமையை பார்த்து சரியான இடத்திற்கு கொண்டு போய் சேர்த்தார். அவர் அன்று என்னை பார்க்கவில்லை என்றால் இன்று நான் இல்லை. தன்னை தூக்கி விட்டு அழகு பார்த்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று சமீபத்திய பேட்டியில் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்