சாக்லேட் பாய் ஹீரோ ஒருவர் கல்யாண வயதை தாண்டிய நிலையிலும் இன்னும் குடும்பம் குட்டி என செட்டில் ஆகாமல் இருக்கிறார். இப்படி சிங்கிளாகவே சுற்றி வரும் இவர் திடீரென சேச்சி நடிகை ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருவது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
சமீப காலமாக இந்த ஜோடி பொது இடங்களில் ஜாலியாக சுற்றி வரும் போட்டோக்கள் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதனாலயே இவர்களின் திருமண அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால் அதற்கான அறிகுறி தான் தெரியவில்லை. பார்ட்டி, திருமணம் என எல்லாவற்றிற்கும் ஜோடியாக செல்லும் இவர்கள் திருமணத்தைப் பற்றி கேட்டால் மட்டும் சிரித்தபடி சென்று விடுகிறார்களாம். என்னவென்று விசாரித்தால் நடிகருக்கு அப்படி ஒரு எண்ணமே கிடையாதாம்.
கல்யாணம், குழந்தை எல்லாம் ஓல்ட் ஃபேஷன். இப்படியே இருக்கும் வரை என்ஜாய் செய்துவிட்டு போவோம் என்ற மனநிலையில் தான் அவர் இருக்கிறாராம். ஆனால் நடிகைக்கோ குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்று ரொம்பவும் ஆசை.
Also read: 48 வயதிலும் ஒண்டிக்கட்டையாக இருக்கும் நடிகை.. தோல்வியில் முடிந்த நான்கு காதல்
அந்த எண்ணத்தோடு என்னை நெருங்காத என காதலன் அதற்கு முட்டுக்கட்டை போடும் நிலையில் வேறு வழியில்லாமல் அடங்கி போகிறாராம். இப்படி தாலி காட்டாமலேயே குடும்பம் நடத்தும் இந்த ஜோடியை பற்றிய சங்கதி தான் கோலிவுட் வட்டாரத்தில் சத்தம் இல்லாமல் சலசலக்கப்பட்டு வருகிறது.