ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நள்ளிரவில் படுக்கைக்கு அழைத்த ஹீரோ.. மறுத்ததால் வாய்ப்பை இழந்த நடிகை

சினிமாவில் இப்போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது துணை நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை பலரும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இப்படி அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு மறுத்ததால் முன்னணி நடிகை ஒருவர் பட வாய்ப்புகளை இழந்துள்ளார்.

கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் ம எழுத்து நடிகைக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் முன்னணி ஹீரோக்களை அவர் அட்ஜஸ்ட் செய்யாதது தான். இப்போது இருக்கும் ஹீரோக்கள் தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகை எப்போதும் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

அப்படி எல்லாவற்றிற்கும் சம்மதம் கூறும் நடிகைக்கு தான் அடுத்தடுத்து வாய்ப்புகளும் கிடைக்கிறது. அப்படி ஒரு அனுபவம் தான் இந்த நடிகைக்கும் நேர்ந்துள்ளது. அதாவது பிரபல ஹீரோ ஒருவர் அந்த நடிகையை நள்ளிரவில் தன் வீட்டிற்கு அழைத்துள்ளார்.

இதனால் அதிர்ந்து போன நடிகை முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதன் காரணமாகத்தான் நடிகை தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி விட்டார் என்று கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது நடிகை இப்படியெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.

இதனால் எனக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் ஒரு காலமும் இது போன்ற விஷயங்களுக்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இதைப்பற்றி நடிகை தற்போது ஓப்பனாக கூறியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Trending News