சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வெளிப்படையாக அதை பேசியதால் வந்த விபரீதம்.. கம்பி நீட்டி எஸ்கேப் ஆன 2வது காதலன்

தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத இடத்தை பெற்றிருப்பவர் அந்த நடிகர். அவருடைய மகள் தான் தற்போது பிரபல நடிகையாக இருக்கும் வாரிசு நடிகை. தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கும் இவர் ஜோடியாக நடித்தார்.

ஆனால் இடையில் என்ன காரணமோ தெரியவில்லை அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. இருப்பினும் தற்போது அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதுவும் நடிகரின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக தான் அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை சமீபத்தில் பேசிய பேச்சு ஒன்று இணைய தளத்தையே கலக்கி வருகிறது. அதாவது நடிகை தனக்கு உடம்பில் சில பிரச்சனைகள் இருப்பது குறித்து வெளிப்படையாக பேசினார். இதைப் பார்த்த பலரும் நடிகைக்கு ஏதோ பெரிய வியாதி இருக்கிறது என்றெல்லாம் தகவலை பரப்பி வந்தனர்.

இதனால் நொந்து போன நடிகை தனக்கு எல்லா பெண்களுக்கும் வரும் பிரச்சனை தான் இருக்கிறது. பெரிய அளவில் எதுவும் இல்லை என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும் அவரை தங்கள் படங்களில் புக் செய்த தயாரிப்பாளர்கள் உடல்நிலை சரியில்லாமல் அவர் எப்படி
நடிப்பார் என்று அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டு வருகிறார்களாம்.

இதனால் அதிர்ச்சியில் இருக்கும் நடிகைக்கு தற்போது பேரதிர்ச்சி ஒன்று வந்துள்ளது. அதாவது நடிகை தற்போது ஒருவரை உருகி உருகி காதலித்து வருகிறார். ஏற்கனவே ஒரு காதல் தோல்வியால் துவண்டு போயிருந்த நடிகைக்கு இந்த இரண்டாவது காதல் பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் தற்போது அதுவும் பிரேக்கப் ஆகும் நிலைக்கு சென்று இருக்கிறது.

என்னவென்றால் நடிகை வெளிப்படையாக கூறிய அந்த செய்தி காதலர் வீட்டில் சிறு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகையை விட்டு வந்துவிடுமாறு அவருக்கு வீட்டில் ஏகப்பட்ட குடைச்சல்கள் கொடுக்கப்பட்டு வருகிறதாம். காதலரும் தற்போது நடிகையை விட்டு பிரியும் முடிவில் இருக்கிறாராம். இதனால் நடிகை தற்போது மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

Trending News