சட்டையை மாற்றுவது போல் காதலியை மாற்றும் தார் நடிகர்.. லிஸ்டில் சிக்கிய நடிகைகள்

பிரபல நடிகர் ஒருவருக்கு கல்யாணம் என்ற பெயரை கேட்டாலே ரொம்பவும் அலர்ஜியாம். சாக்லேட் பாய் இமேஜுடன் வலம் வரும் அவர் நிஜ வாழ்க்கையில் பெரிய காதல் மன்னனாக இருக்கிறார். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் தற்போது நடிகர் சட்டையை மாற்றுவது போல் காதலிகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

லிவிங் ரிலேஷன்ஷிப் வாழ்க்கையை ஆதரிக்கும் இந்த நடிகர் முதலில் இளம் நடிகை ஒருவரோடு காதலில் இருந்தார். சில வருடங்கள் நீடித்த அந்த காதல் கசந்து போனதால் அவரை விட்டு பிரிந்த நடிகர் உடனே வாரிசு நடிகையை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். இருவரும் நம்மைப் போல் காதலர்கள் உண்டா என்று சிறகடித்து பறந்தனர்.

Also read: குடும்பத்தில் கும்மியடித்த நபர்.. நடிகையின் வாழ்க்கையை நாசமாக நடந்த சதி

ஆனால் இந்த காதலும் சில வருடங்களிலேயே புளித்துப் போனதால் இருவரும் சமரசமாக குட்பை சொல்லி பிரிந்தனர். இது நடிகரின் முடிவு தான் என்பதால் வாரிசு நடிகை இப்போது வரை அவர் மீது தீராத கொலைவெறியில் இருக்கிறாராம். இதை அடுத்து இப்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகையையும் இவர் விட்டு வைக்கவில்லை.

வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் அந்த நடிகை இவரை நம்பி திருமணம் செய்யும் அளவுக்கு வந்தார். அதற்காக சில பரிகார பூஜைகளை கூட அவர் செய்தார் ஆனாலும் இந்த ஜோடி பிரிந்தது காரணம் என்னவென்றால் நடிகையுடன் உறவில் இருக்கும் போதே வேறு ஒரு ஹீரோயினையும் இந்த நடிகர் ரூட் விட்டு இருக்கிறார்.

Also read: நடிகையிடம் அந்தரங்க மயக்கத்தில் இருந்ததால் வந்த வினை.. திட்டமிட்டு பின்னப்பட்ட சதி வலை

இதனால் கடுப்பான நடிகை இவரை தூக்கி போட்டு விட்டு சென்று விட்டார். அந்தக் கோபம் நடிகருக்கு இன்னமும் இருக்கிறது. நான் தான் யாராயிருந்தாலும் ரிஜெக்ட் செய்வேன் என்னையே ஒருத்தி வேண்டாம் என்று எப்படி சொல்லலாம் என்ற கடுப்பில் அவர் சில காலம் சுற்றிக் கொண்டிருந்தார்.

ஆனால் இதெல்லாம் பழைய கதை. இப்போது ஒரு கியூட் நடிகையை தன் வலையில் விழ வைத்திருக்கிறார் அந்த நடிகர். இருவரும் பொதுவெளியில் அவ்வப்போது சுற்றி திரிவது மீடியாக்கள் கண்களிலும் பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் இவர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் உறவை தொடர்ந்து வருகின்றனர். இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா அல்லது நடிகர் வழக்கம்போல் வேலையை காட்டுவாரா என்பது கூடிய விரைவில் தெரியவரும்.

Also read: டாப் ஹீரோவின் வாழ்க்கையில் விளையாடிய அம்மா நடிகை.. மகள் தலையில் இடி போல் விழுந்த கர்மா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்