சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சீயான் விக்ரமின் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்.. தங்கலான் கொடுக்கப் போகும் அப்டேட்

சியான் விக்ரமுக்கு இந்த ஆண்டாவது மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஏனென்றால் கடந்த சில வருடங்களாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய ஹிட் படங்கள் எதுவும் விக்ரம் கொடுக்கவில்லை. இந்நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.

கோலார் தங்க சுரங்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு 80% சதவீதம் முடிந்து விட்டதாகவும் மீதம் 20% படப்பிடிப்பு மட்டுமே உள்ளதாக பா ரஞ்சித் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதுவும் வருகின்ற மே மாதத்திற்குள் எடுத்து முடிக்கப்படும் என்றும், சி ஜி மற்றும் வி எப் எக்ஸ் வேலைகள் மட்டும் நிறைய இருப்பதாக கூறப்படுகிறது.

Also read: கமலுடன் துணிந்து மோதும் விக்ரம்.. பலத்தை நிரூபிக்க எடுத்த கடைசி ஆயுதம்

மேலும் தங்கலான் படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 17ஆம் தேதி சியான் 57வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நாளில் அவரது ரசிகர்களை மூச்சடைக்க வைக்கும் படியாக பல அப்டேட்டுகளை தங்கலான் படக்குழு கொடுக்க இருக்கிறது.

தங்கலான் படம் குறித்து சுவாரசியமான அறிவிப்புகள், போஸ்டர்கள், கிளின்ட் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மேலும் பா ரஞ்சித்தின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி இடம் இருப்பதால் விக்ரமுக்கு தங்கலாம் படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என அவரது ரசிகர்கள் பெரிதும் நம்புகிறார்கள்.

Also read: கேள்விக்குறியான விக்ரமின் எதிர்காலம்.. தங்கலான் படத்திற்காக நீச்சல் குளத்திலேயே தவம் கிடக்கும் புகைப்படங்கள்

மேலும் இப்படம் கே ஜி எஃப் காலங்களில் எடுக்கப்பட்டதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாக்கி உள்ளது. இதில் விக்ரமன் கெட்டப்பும் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருக்கிறது. கண்டிப்பாக தங்கலான் படம் விக்ரம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

தங்கலான் அப்டேட்

vikram-thangalan
vikram-thangalan
- Advertisement -

Trending News