தம்பி ராமையா அறைக்கு பக்கத்து அறையை புக் செய்த சன்னி லியோன்.. காரணம் கேட்டு அதிர்ந்து போன கோலிவுட்

தமிழில் முதல் முறையாக முழுமையாக ஒரு படத்தில் களமிறங்குகிறார் சன்னி லியோன். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தியில் வெளியாகவிருக்கும் படம் “ஷீரோ”.

ஏற்கனவே “வடகறி” படத்தில் ஒற்றைப்பாடலுக்கு ஆடிய ஆட்டத்திலேயே ஆட்டம் கண்டது தமிழ் திரையுலகம். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சன்னி லியோன் ஷீரோ என்ற படத்தில் நடிக்கிறார் இவரோடு தம்பி ராமையா சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அந்த வகையில் தம்பி ராமையா சன்னி லியோனுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். ஷீரோ படத்தில் சன்னி லியோனை அடைய நினைக்கும் ஒரு சைக்கோ கேரக்டரில் நடித்திருப்பதாகவும்.

தனது வசனங்களை ஸ்கிரிப்டுகளை தானே எழுதியதாகவும் கூறிய தம்பி ராமையா டூப் இல்லாமல் ஒரு ஸ்டண்டில் நடித்தாராம் அப்போதிலிருந்து சன்னி ராமையாவின் ரசிகராகிப்போனாராம்.

சன்னிலியோன் அவரின் பிள்ளைகளுடனே ஸ்பாட்டுக்கு வருவார் எனறும் அவரின் பிள்ளைகளும் தம்பி ராமையாவுடன் நெருக்கமாகிப்போனதாகவும் கூறினார். தம்பி ராமையாவுடன் பிள்ளைகள் விளையாடுவதற்காக அவரின் அறைக்கு அருகிலேயே தனது அறையை ஷிப்ட் செய்து விட்டாராம் சன்னி.

thambi ramaya

சிரித்த முகமும் வேடிக்கையான பேச்சும் சன்னிக்கு மிகவும் பிடித்தள்ளதாக தெரிவித்தார் தம்பி ராமையா.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை