என்ன விஜய் இப்படி இறங்கிட்டாரு.. தளபதி மூஞ்சில தாண்டவம் ஆடும் அரசியல்

#Thalapathy Vijay: தமிழ்நாட்டுல பொசசிவ்னஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்களுக்கு கூட இப்போது அது புரிந்திருக்கும். அதுக்கு மொத்த காரணம் தளபதி விஜய் தான். வசீகரா படத்துல சினேகா, விஜய் கிட்ட திரும்பத் திரும்ப சொல்ற என்ன தவிர வேற யாரையாவது பார்த்த தொலைச்சிடுவேன் அப்படின்னு சொல்லுவாங்க. அப்படித்தான் இப்போ விஜய் ரசிகர்கள் புலம்பிட்டு இருக்காங்க.

விஜய் GOAT படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்று இருக்கிறார். கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து இப்போதுதான் அங்கு போய் இருக்கிறார். தமிழ்நாட்டைப் போலவே, கேரளாவிலும் அவருக்கு ரசிகர்கள் ரொம்ப அதிகம். எப்போதுமே அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கு பிறகு முதல் முறையாக கேரளாக்கு சென்று இருக்கிறார். அதிலும் தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகுகிறேன் என அறிவித்து இருக்கிறார். இதனால் இந்த முறை கேரளாவில் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

விஜய் முதல் நாள் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டுக்கு போனபோதே அந்த இடமே ஸ்தம்பித்து விட்டது. விஜய் ரசிகர்கள் ரவுண்ட் கட்டி வரவேற்றதில் அவருடைய காஸ்ட்லி கார் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து விஜயின் படப்பிடிப்பு நடக்கும் எல்லா இடங்களிலும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து வருகிறார்கள்.

விஜய் கூட தன்னுடைய ரசிகர்களுக்காக படப்பிடிப்பு இடத்திலும் நேரம் ஒதுக்கி வருகிறார். அவர்களுடன் செல்பி எடுப்பது, பேசுவது என நேரம் செலவழித்து வருகிறார். தளபதிய அந்த ஊர்காரங்க கொண்டாடுவது, அவர்களிடம் அவர் பேசுவதும் லைட்டாக கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது.

நேற்று கேரள ரசிகர்களிடம் விஜய் மனம் விட்டு பேசி இருந்தார். சேட்டா, சேச்சி நீங்க எங்க ஊர் நண்பா, நம்பி போல சிறந்தவங்க. உங்கள பார்ப்பதில் எனக்கு ஒரு பாடு சந்தோஷம் என மலையாளத்தில் பேசி அவர்களை திக்கு முக்காட வைத்து விட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

தன்னை நேரில் பார்க்க வரும் ரசிகர்களை ரொம்பவும் அன்போடு வரவேற்று வருகிறார் விஜய். இதனால் கேரள ரசிகர்கள் ட்விட்டரில் தளபதி விஜய் என்னும் ஹேஷ் டாக்கை பெரிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். கேரள மாநிலமே ஏதோ திருவிழா நடப்பது போல் கொண்டாட்டமாக மாறி இருக்கிறது.

மக்களின் மனதில் கூட ஒரு சின்ன எண்ணம் தோன்றலாம். நம்ம விஜய் இப்படி எல்லாம் கிடையாதே, இப்படி எல்லாம் யாருகிட்டயும் பேச மாட்டாரே என்று. என்ன பண்றது குரங்குக்கு வாக்கப்பட்டால் மரத்துக்கு மரம் தாவி தான் ஆகணும். அப்படித்தான் அரசியல்வாதியின் முதல் கட்ட அடையாளமே வாய்ஜாலம் தான். அதை தான் தொடங்கி விட்டார் நம்ம தளபதி.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்