விஜய் சார், 120 கோடி சம்பளம், 2023 படம் ரிலீஸ்.. தளபதி67க்கு கொக்கி போடும் தெலுங்கு தயாரிப்பாளர்

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பெரிய நடிகர்களை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் பேன் இந்தியா படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஒருவர் தளபதி விஜய்யை சந்தித்து தளபதி 67 படத்திற்கு கால்சீட் கேட்டுள்ளதுதான் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக விஜய்யின் தெலுங்கு மார்க்கெட் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. முதலில் கேட்பாரற்று கிடந்த விஜய்யின் தெலுங்கு மார்க்கெட் தற்போது 20 முதல் 30 கோடி வசூல் செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பிகில் மற்றும் மாஸ்டர் போன்ற படங்கள் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது தெலுங்கு சினிமாவிலும் விஜய்யின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கேரளா மற்றும் கர்நாடகாவில் விஜய்யின் கொடி உயரப் பறக்கிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ என்பவர் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், ராம்சரண், பிரபாஸ் ஆகியோரை வைத்து ஒரே நேரத்தில் படம் தயாரித்து வருகிறார். தமிழில் சன் பிக்சர்ஸ் எப்படியோ அப்படித்தான் தெலுங்கில் தில் ராஜூவின் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்.

விஜய்யின் கடைசி சில வெற்றி படங்களை பார்த்த தில் ராஜூ சமீபத்தில் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. மேலும் விஜய்க்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் தருவதாகவும், தளபதி 67 படத்தை மிகப்பெரிய பேன் இந்தியா படமாகவும் ரிலீஸ் செய்கிறேன் என உத்தரவாதம் கொடுத்துள்ளாராம்.

அதற்காக தற்போது கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் என்பவரிடம் ஒரு கதையை எழுத சொல்லியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நாளுக்கு நாள் விஜய்யின் சினிமா மார்க்கெட் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் மட்டும் உறுதியானால் கண்டிப்பாக ரஜினிக்கு பிறகு இந்தியா முழுவதும் தமிழ் வசூல் நாயகனாக விஜய் உயர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

vijay-dilraju-cinemapettai
vijay-dilraju-cinemapettai

இந்த தகவலை தெலுங்கு முன்னணி பத்திரிக்கை நிறுவனம் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய் தற்போது தளபதி 65 படத்திற்காக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்பதும் கூடுதல் தகவல்.

- Advertisement -