தேடி வந்த தளபதி 65 பட வாய்ப்பு.. ஓகே சொல்லலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் பிரபல நடிகை

கடந்த சில வருடங்களாகவே தளபதி விஜய் நடிக்கும் படங்களில் ஹீரோயின்களுக்கு பெரிதும் வேலை இல்லாமல் போய்விடுகிறது. இதனாலேயே பலரும் கிண்டல் கேலி நிலைக்கு ஆளாகி வருகின்றனர். அதுவும் சமீபத்தில் வந்த மாஸ்டர் படத்தால் மாளவிகா மோகனன் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.

இதனால் தற்போது தளபதி விஜய் படங்களில் நடிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்து வருகிறார்கள் சில நடிகைகள். ஆனால் கமர்சியல் நடிகைகளைப் பொறுத்தவரை அந்த யோசனையை தேவையில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்படி ஒரு நடிகைக்கு தளபதி 65 வாய்ப்பு கிடைத்தும் ஓகே சொல்ல பல நாட்களாக யோசித்து வருகிறாராம். இதனால் படக்குழு வேறு நடிகையிடம் செல்லலாமா எனவும் ஆலோசித்து வருவதாக சன் பிக்சர்ஸ் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

விஜய் தற்போது இளம் இயக்குனர்களுடன் பணியாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலிப்குமார் என்பவருடன் தளபதி 65 படத்தில் களமிறங்க உள்ளார்.

ஸ்டைலிஷ் கமர்சியல் அம்சமாக உருவாக இருக்கும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக மாஸ் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டேவை நடிக்க கேட்டு வருகிறார்களாம் படக்குழுவினர்.

pooja-hedge-cinemapettai
pooja-hedge-cinemapettai

ஆனால் சமீபத்தில் மாளவிகா மோகனன் இணையதளங்களில் செமையாக கலாய்க்கபட்டதைக் கேள்விப்பட்ட பூஜா ஹெக்டே தற்போது தளபதி 65 படத்தில் நடிக்க தயக்கம் காட்டுகிறாராம். யோசனை விஜய்யுடன் நடிப்பது இல்லை எனவும், சம்பளத்தை கொஞ்சம் சேர்த்துக் கேட்பதற்காக போடும் பிட்டுதான் எனவும் கூறுகின்றனர்.

- Advertisement -