விஜய் வெறியர்களுக்கு மாஸ்டர் படத்தில் காத்திருக்கும் தாறுமாறான தரிசனம்.. எக்கச்சக்க குஷியில் தளபதி ரசிகர்கள்!

கோலிவுட்டில் ‘தளபதி’ என்கிற கவுரவத்துடன் வெற்றி நாயகனாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவரது படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீசை குவிப்பதால், இவருக்கு பாக்ஸ் ஆபீஸ் கிங் என்ற பெயரும் உண்டு.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாஸ்டர்’ படத்திற்கான எதிர்பார்ப்பு, தளபதி  வெறியர்களிடம் ஏகபோகமாக உள்ளது.

அதேபோல் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற பொங்கலன்று ரிலீசாகி தியேட்டர்களை மிரள விட இருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், தளபதி விஜய் ‘மாஸ்டர்’ படத்தில் சட்டையில்லாமல் சில காட்சிகளில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் ப்ரொஃபஸர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இவ்வாறிருக்க, தற்போது 46 வயதான விஜய், இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் சட்டை இல்லாமல் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், விஜய் வைத்துள்ள சிக்ஸ்பேக்சை பெரிய திரையில் பார்க்கும்போது ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக மிரண்டுவிடுவர் எனவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் விஜய் கில்லி, வேலாயுதம் ஆகிய படங்களில் சட்டை இல்லாமல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

thalapathy-master
thalapathy-master

எனவே, நடிகர் விஜய்யின் தாறுமாறான தரிசனத்தை காண அவருடைய ரசிகர்கள் தற்போது இருந்தே ரெடியாகி கொண்டிருக்கின்றார்களாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்