40 வருடமாகியும் வித்தியாவை மறக்காத தளபதி விஜய் .. பாசத்தால் நெகிழ வைத்த சம்பவம்

விஜய் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவரின் சினிமா பயணம் மட்டும்தான். ஆனால் அதை தவிர்த்து அவரின் தங்கை மீது கொண்ட பாசம் யாரும் அறியாத ஒன்றாகும். அவ்வாறு தற்போது இவரின் பாசத்தின் நிகழ்வாக இவர் செய்து வரும் சம்பவம் மன உருக்கத்தை ஏற்படுத்துகிறது.

இவரின் தங்கையான வித்யா மீது அதிக அளவு பாசத்தை வைத்திருக்கிறார். அவ்வாறு இருக்கையில் தன்னுடைய ஒன்பதாவது வயதில், தன் தங்கைக்கு ஏற்பட்ட லுக்கிமியா என்னும் நோயால் அவரை இழந்திருக்கிறார். அந்த பிரிவினை தாங்காத இவர் சில காலம் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

Also Read: அத நெனச்சாலே வயிறே எரியுது.. முதலும் கடைசியுமாய் ஸ்ரீகாந்தால் தோல்வி, வெறுத்துப் போன தயாரிப்பாளர்

அத்தகைய சம்பவம் 40 வருடமாகியும் இன்று வரை அவர்களின் நினைவில் இருந்து வருகிறது. மேலும் இவர் தற்பொழுது அரசியலில் ஆர்வம் கொண்டுள்ளதால், விரைவில் அரசியல் களம் காணும் திட்டத்தில் உள்ளார். அதனைத் தொடர்ந்து விஜய்யின் மக்கள் இயக்கம் நிர்வாகத்தில் உள்ள ஆட்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் உள்ள ஒரு பள்ளியை நடத்தி வருகின்றனர்.

அப்பள்ளி விஜய்யின் தங்கை நினைவாக வித்யா இளைய தளபதி என்ற பெயரில் நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர். தற்பொழுது இந்த ஸ்கூலில் படிக்கும் மாணவர்கள் தேர்வு விகிதத்தில் சாதனை படைத்துள்ளனர். அதனை அறிந்த விஜய், இப்பள்ளியை குறித்து ஒரு முடிவு எடுக்க முயன்றுள்ளார்.

Also Read: நடிப்பை தாண்டி ஷாப்பிங் மாலில் அதிகம் முதலீடு செய்யும் விஜய்.. மூக்கு மேல விரல் வச்சு பார்க்கும் திரையுலகம்

அதன் விளைவாக விஜய், நிர்வாகிகளை அழைத்து இப்பள்ளிக்கு தேவைப்படும் பணத்தை இனிமேல் நானே பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இனி யாரிடமும் கையேந்த வேண்டாம். எது வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் இப்பள்ளியை நல்ல முறையில் நடத்த வேண்டும் எனவும் கூறி உள்ளார்.

அத்தகைய சம்பவம் அவர் தங்கையான வித்யா மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் கேன்சருக்கு பலியான தன் தங்கையின் நினைவாக இப்பள்ளியினை மேம்படுத்த விஜய் முடிவு எடுத்துள்ளார். அதை தொடர்ந்து தன் கட்சியின் மூலம் இத்திட்டத்தினை செயல்படுத்துமாறு கூறி வருகிறார் விஜய்.

Also Read: செமையாய் என்ஜாய் பண்ணும் விஜய்.. அந்த 2 பேரால் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ரகளையாம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை