விஜய்க்கு சிலை வைத்த கன்னட ரசிகர்கள்.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்!

எளிமையான தோற்றம், ரசிகர்களிடத்தில் அன்பான பேச்சு ஆகிய நற்குணங்களால் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக கேரளாவில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் நமீதா, குஷ்பூ போன்ற நடிகைகளுக்கு கோவில் கட்டிய ரசிகர்களும் நம் தமிழ்நாட்டில்தான் உள்ளனர்.

ஆனால் இதுவரை தமிழகத்தில் நடிகர் விஜய்க்கு சிலை இல்லை என அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் இதை போக்கும் விதமாக மங்களூரை சேர்ந்த கன்னட விஜய் ரசிகர்கள் சுமார் 10 அடியில் விஜய்க்கு வெண்கல சிலை வைத்து அசத்தியுள்ளனர்.

விஜய் மீது தீவிர பற்றுள்ள கன்னட ரசிகர்கள் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் இந்த சிலையை வைத்து நிறுவியுள்ளனர். சிலையை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் திறந்து வவைத்தார். சிலை திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

thalapathy-vijay
thalapathy-vijay

நடிகர் விஜய்க்கு மொத்த 10 அடியில் முழு உருவ சிலை வைத்திருப்பது இதுவே முதல் முறை. எனவே விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். சிலை திறப்பு விழாவை திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -