விஜய், பேரரசு தம்பி கூட்டணியில் 2006ல் ட்ராப் ஆன பிரம்மாண்ட திரைப்படம்.. டைட்டிலே தாறுமாறா இருக்கே!

தளபதி விஜய் நடிப்பில் ஆரம்பத்தில் உருவாகி கைவிடப்பட்ட படங்களின் எண்ணிக்கை மிக குறைவு தான். பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்தது கௌதம் மேனன் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு உருவாகி நிறுத்தப்பட்ட யோகன் அத்தியாயம் ஒன்று திரைப்படம் தான்.

ஆனால் அதற்கு முன்பே தளபதி விஜய் 2006 ஆம் ஆண்டு பேரரசு தம்பி முத்துவடுகு என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தை ஆரம்பித்து பின்னர் எதிர்பாராத சூழ்நிலையில் அந்த படம் கைவிடப்பட்டதாம். இதனை முத்து வடுகு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. அதுவும் பேரரசு கூட்டணியில் வெளியான திருப்பாச்சி மற்றும் சிவகாசி போன்ற படங்கள் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.

திருப்பாச்சி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சிவகாசி படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும்போது பேரரசு தம்பி அஸிஸ்டண்ட் டைரக்டர் முத்துவடுகு என்பவர் விஜய்யிடம் ஒரு கதை கூறினாராம். பிரமாண்ட கமர்சியல் படமாக உருவாக இருந்த அந்த படத்திற்கு முரசு என டைட்டில் வைத்தார்களாம்.

muthu-vadugu-cinemapettai
muthu-vadugu-cinemapettai

பரபரப்பாக தொடங்கப்பட்ட அந்த திரைப்படம் அடுத்த சில நாட்களிலேயே கைவிடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அதற்கு காரணம் என்ன என்பதை சொல்லாமல் மூடி மறைத்துள்ளார் முத்துவடுகு. ஒருவேளை அந்தப்பட வாய்ப்பு கிடைத்திருந்தால் பேரரசு போல நானும் பேசப்பட்டிருப்பேன் என வருத்தப்பட்டுள்ளார்.

திருப்பாச்சி, சிவகாசி படங்களுக்கு பிறகு பேரரசுவே பேசப்படவில்லை என்பது வேற விஷயம். புரட்சி கலைஞர் விஜயகாந்த் அந்த சமயத்தில் தனது கட்சிக்கு முரசு சின்னத்தை வைத்திருந்தார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒருவேளை கட்சி சம்பந்தமான பிரச்சனையால் அந்த படம் கைவிடப்பட்டதா என்பதும் புரியாத புதிராக உள்ளது.

- Advertisement -