வாரிசு, துணிவு முதல் நாள் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் கிங் என மீண்டும் நிரூபித்த தளபதி விஜய்

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த இரு படங்களுக்குமே ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் வாரிசு மற்றும் துணிவு இரண்டுமே வெவ்வேறு கதையம்சம் கொண்ட படமாக எடுக்கப்பட்டிருந்தது.

துணிவு படம் முழுக்க முழுக்க ஆக்சன் என்றால் வாரிசு அதற்கு நேர் எதிராக குடும்ப செண்டிமெண்டாக எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ் சினிமாவை பொருத்தவரையில் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளதால் இவர்கள் படம் எப்போதுமே வசூலை வாரி குவிப்பது வழக்கம்.

Also Read : கார்ப்பரேட்டுக்கு கைக்கூலியாகும் சினிமா விமர்சகர்கள்.. வாரிசு வசூலை உடைக்க செய்த சதி

அந்த வகையில் துணிவு மற்றும் வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. அதாவது துணிவை விட மிகச் சின்ன வித்தியாசத்தில் வாரிசு படம் அதிகமாக வசூல் செய்து வெற்றி பெற்றுள்ளது. அதாவது வாரிசு படம் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 26.5 கோடி, உலகம் முழுவதும் 35 கோடி வசூல் செய்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 17 கோடி, கர்நாடகாவில் 5.65 கோடி, கேரளாவில் 4.5 கோடி மற்றும் பிற இடங்களில் 1 கோடி வசூல் செய்துள்ளது. அதுவே துணிவு படம் வாரிசை காட்டிலும் குறைவாக பெற்று இந்தியா முழுவதும் 24 கோடி, உலகம் முழுவதும் 30 கோடி வசூல் செய்துள்ளது.  தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வாரிசை விட துணிவு தான் அதிகமாக வசூல் செய்தது.

Also Read : போஸ்டர், ட்ரெய்லரை காட்டி ஏமாற்றிய வாரிசு.. மன உளைச்சல், மண்ணை கவ்விய ஓப்பனிங்

அதாவது 17.5 கோடிக்கு மேல் துணிவு படம் வசூல் செய்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் 2.5 கோடியும், கர்நாடகாவில் 3.5 கோடியும், கேரளாவில் 1.5 கோடியும் இந்தியாவின் முக்கிய பகுதிகளில் 50 லட்சம் மட்டுமே துணிவு படம் வசூல் செய்துள்ளது. விஜய்க்கு மற்ற மொழிகளிலும் அதிக ரசிகர்கள் உள்ளதால் துணிவை காட்டிலும் அதிக வசூல் பெற்றுள்ளார்.

மேலும் தற்போது வரை விஜய் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் வாரிசு, துணிவு ஒன்றாக வெளியாவதால் விஜய் படத்தின் வசூல் பாதிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் தளபதி விஜய் வசூல் மன்னன் என்பதை வாரிசு படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

Also Read : வம்சிக்கு ரூட்டு போட்டு கொடுத்த ரஜினி.. வாரிசு படத்திற்கு முன் உதாரணமே சூப்பர் ஸ்டாரின் இந்தப் படம் தான்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -